UPI ID : enb@axis.com
வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கைநாடளாவிய மழை- வெள்ள- புயல் அபாயம்வடக்கு கிழக்கு மலையகத்தில் பெரும் ஆபத்துமட்டக்களப்பு , அம்பாறை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைமட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று ஆற்றுப் படுக்கைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.சோமாவதிய மற்றும் மனம்பிட்டி ஆகிய பிரதேசங்கள் இன்று மாலைக்குள் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.யான் ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் அப்பகுதி ஊடாகப் பயணிக்கும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், விசேடமாக குச்சவெளி, பதவிய ஸ்ரீபுர, கெப்பித்திகொல்லாவ, கோமரன்கடவல, ஹொரவபொத்தானை, மொரவெவ, கஹட்டகஸ்திகிலிய மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்இதேவேளை, முந்தானை ஆற்றுப் படுக்கையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, முந்தானை ஆறு படுக்கையைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முந்தானை ஆறு சார்ந்த தாழ்வான பகுதிகளில், தற்போதிருந்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.மாதுறு ஓயா படுக்கையைச் சேர்ந்த கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மஹாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டி, திம்புலாகல, வெலிகந்த மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மாதுறு ஓயா சார்ந்த தாழ்வான பகுதிகளில் தற்போதிருந்து அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது மட்டக்களப்பில் இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள மதுபானசாலை வீதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளதனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாநகர சபையினால் முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதுடன், மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்ட பகுதிகளின் மின் இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டு வருகின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புஅதேவேளை கல்லடி பகுதியிலும் மரங்கள் முறிந்ததனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள இருதயபுரம், கருவேப்பங்கேணி, மாமாங்கம், கூழாவடி, புதூர், சேத்துக்குடா, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதுடன், பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று முதல் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் கன மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.யாழ் நெடுந்தீவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க விமான படையினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த புயலுக்கு "சென்யார்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.மேல் - வடமேல் திசையில் நகர்ந்து, தென் அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் எனவும் இது மேலும் அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (25) தெரிவித்திருந்தது.நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது.கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுக்கைகளுக்கு எச்சரிக்கைகல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக விசேடமாக தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று (26) நண்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, நேற்று (25) அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 225 மி.மீ. அம்பாறையில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்படாவிட்டாலும், ஏனைய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்தார். அதிக மழைவீழ்ச்சி காரணமாக தற்போது நாட்டின் 25 பிரதான குளங்களும் 26 நடுத்தர குளங்களும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று ஆற்றுப் படுக்கைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. சோமாவதிய மற்றும் மனம்பிட்டி ஆகிய பிரதேசங்கள் இன்று மாலைக்குள் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். யான் ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் அப்பகுதி ஊடாகப் பயணிக்கும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், விசேடமாக குச்சவெளி, பதவிய ஸ்ரீபுர, கெப்பித்திகொல்லாவ, கோமரன்கடவல, ஹொரவபொத்தானை, மொரவெவ, கஹட்டகஸ்திகிலிய மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முந்தானை ஆற்றுப் படுக்கையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, முந்தானை ஆறு படுக்கையைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முந்தானை ஆறு சார்ந்த தாழ்வான பகுதிகளில், தற்போதிருந்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. மாதுறு ஓயா படுக்கையைச் சேர்ந்த கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மஹாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டி, திம்புலாகல, வெலிகந்த மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மாதுறு ஓயா சார்ந்த தாழ்வான பகுதிகளில் தற்போதிருந்து அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.கண்டி - நுவரெலியா வீதி கெரண்டியெல்லயில் மூடல்கண்டி - நுவரெலியா பிரதான வீதி கெரண்டியெல்ல பகுதியில் இன்று (26) பிற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெரண்டியெல்ல பகுதியில் பிரதான வீதியில் பாரிய கற்கள் விழும் அபாயம் காரணமாகவே வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது. தற்போதும் சில கற்கள் சரிந்து வீதிக்கு மேலாகக் காணப்படுவதுடன், மழையுடன் அக்கற்கள் வீதியில் விழும் அபாயம் உள்ளது. அதற்கமைய, நுவரெலியாவிற்குச் செல்லும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கொத்மலை பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஹப்புத்தளை பகுதியில் மண்சரிவுபதுளை - கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளைக்கும், பெரகலைக்கும் இடையிலான பகுதியில் இன்று (26) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து ஹப்புத்தளை நகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து குறித்த வீதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டன இந்நிலையில் பதுளை - கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்து ஒரு மருங்கில் மாத்திரம் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் உறவினர் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.இலங்கை ஊடகங்கள்-ஜே.வி.பி நியூஸ்-அததெரண தமிழ்
Trump vows to ‘permanently pause’ migration from ‘Third World countries’'மூன்றாம் உலக நாடுகளிலிருந்து' இடம்பெயர்வை 'நிரந்தரமாக நிறுத்த' டிரம்ப் சபதம். வாஷிங்டனில் 2 தேசிய காவல்படை உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி கடும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.அமெரிக்க குடியேற்ற முறை "முழுமையாக மீட்கப்படும்" வரை இடைநீக்கம் அமலில் இருக்கும் என்று டிரம்ப் கூறினார், மேலும் "மில்லியன் கணக்கான பைடன் சட்டவிரோத சேர்க்கைகளை" அவர் நிறுத்துவதாக உறுதியளித்தார். politico.eu/ எலெனா ஜியோர்டானோ எழுதியது நவம்பர் 28, 2025 ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வரும் குடியேற்றத்தை நிரந்தரமாக நிறுத்துவதாக" உறுதியளித்துள்ளார், இது அமெரிக்க அரசாங்கத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கையின் ஒரு பெரிய விரிவாக்கமாக இருக்கும்.அமெரிக்க குடியேற்ற முறை "முழுமையாக குணமடையும்" வரை இடைநீக்கம் அமலில் இருக்கும் என்று டிரம்ப் கூறினார் , மேலும் "மில்லியன் கணக்கான பைடனின் சட்டவிரோத சேர்க்கைகள்" என்று அவர் அழைத்ததை நிறுத்துவதாக உறுதியளித்தார்."அமெரிக்காவிற்கு நிகர சொத்தாக இல்லாத அல்லது நம் நாட்டை நேசிக்க இயலாத எவரையும் வெளியேற்றுவதாகவும், குடிமக்கள் அல்லாதவர்களிடமிருந்து கூட்டாட்சி சலுகைகளை பறிப்பதாகவும், பாதுகாப்பு ஆபத்து, பொதுச் சுமை அல்லது "மேற்கத்திய நாகரிகத்துடன் பொருந்தாதது" என்று கருதப்படும் எந்தவொரு வெளிநாட்டினரையும் நாடு கடத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.புதன்கிழமை வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தேசிய காவல்படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டு , அவரது சக ஊழியர் ஒருவர் காயமடைந்ததை அடுத்து, டிரம்ப் தனது உண்மை சமூக தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்றும், அவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.லகன்வால் அமெரிக்காவுடன் - உளவுத்துறை உட்பட - முந்தைய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதை சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் பொலிடிகோவிடம் உறுதிப்படுத்தினார்."ஆப்கானிஸ்தானில் இருந்து பைடன் பேரழிவுகரமான முறையில் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரை 2021 செப்டம்பரில் அமெரிக்காவிற்கு அழைத்து வருவதை பைடன் நிர்வாகம் நியாயப்படுத்தியது. ஏனெனில் அவர் காந்தஹாரில் ஒரு கூட்டாளிப் படையின் உறுப்பினராக CIA உட்பட அமெரிக்க அரசாங்கத்துடன் முன்பு பணியாற்றினார். குழப்பமான வெளியேற்றத்தைத் தொடர்ந்து இந்தப் பணி விரைவில் முடிவுக்கு வந்தது," என்று ராட்க்ளிஃப் கூறினார்."இந்த நபர் - மற்றும் பலர் - இங்கு வர ஒருபோதும் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது. பைடன் நிர்வாகத்தின் பேரழிவு தோல்விகளால் ஏற்படும் தொடர்ச்சியான விளைவுகளைத் தாங்கிக் கொள்வதை விட நமது குடிமக்களும் சேவையாளர்களும் மிகச் சிறந்ததை அடையத் தகுதியானவர்கள். கடவுள் நமது துணிச்சலான துருப்புக்களை ஆசீர்வதிப்பாராக," என்று அவர் மேலும் கூறினார்.புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டை "தீய செயல், வெறுப்பு மற்றும் பயங்கரவாதச் செயல்" என்று கண்டனம் செய்த டிரம்ப், அதை "நமது முழு நாட்டிற்கும் எதிரான குற்றம்" என்று அழைத்தார்.டிரம்ப் தனது தீவிர குடியேற்ற அமலாக்கம் மற்றும் தெருக் குற்றங்கள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய காவல்படை துருப்புக்கள் வாஷிங்டனில் நிறுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே, வாஷிங்டனுக்கு கூடுதலாக 500 தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்ப டிரம்ப் தனக்கு அறிவுறுத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறினார் ."தலைகீழ் இடம்பெயர்வு மட்டுமே இந்த சூழ்நிலையை முழுமையாக குணப்படுத்த முடியும்" என்று டிரம்ப் கூறினார்.தமிழ் மொழியாக்கம் கூகிள்
மாவீரர் நினைவேந்தல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!அதனை ஈழ விடுதலைப் புரட்சித் திட்டத்தில் நிறுத்துவோம்!!மாவீரர் தினம் 2025.கார்த்திகை மாதம் 27ம் திகதி தமிழீழத் தேசிய மாவீரர் தினம்,மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!ஈழ மாவீரர் தினம், இலங்கைத் தீவில் ஒடுக்கப்படும் ஈழதேசம்,பிரிந்து சென்று தமிழீழத் தனியரசமைக்க நடத்திய ஆயுதம் ஏந்திய விடுதலைப் புரட்சியில் தம்மை அர்ப்பணித்து ஆகுதியாக்கிக் கொண்ட போராளிகளை நினைவு கூரும் தினமாகும். இதுவல்லாமல் அது வேறெதுவுமல்ல.இவ்வாண்டு இதே மாதத்திற்தான் ஒடுக்கும் சிறீ லங்கா அரசின் அனுரா அரசாங்கம் தனது இரண்டாவது, 2026ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.இலங்கையின் உடனடி மற்றும் நீண்ட எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது இதுவே ஆகும்.நோபல் ரம்பின் யுத்த காண்டம் பாலஸ்தீனம்,வெனுசுவேலா, தாய்வான் என பல்கிப் பெருகி வருகின்றது.மேலும் முக்கியமாக கார்த்திகை 29, பாட்டாளிவர்க்க ஆசான் தோழர் ஏ.எம்.கே அவர்களின் நினைவு தினமும் ஆகும்.மாவீரர் நினைவேந்தல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!அதனை ஈழ விடுதலைப் புரட்சித் திட்டத்தில் நிறுத்துவோம்!!* இந்தக் கணம் வரையான இலங்கைச் செய்திகளின் அடிப்படையில் அனுரா-ரில்வின் ஆட்சி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் மீது தனது பாசிச அரச வன்முறையை கட்டவிழ்த்த வண்ணம் உள்ளது.* ஈழமக்கள் தமது சுய உணர்வில் இதை எதிர்த்து மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்கக் களம் புகுந்துள்ளனர்.* `தமிழ்த் தேசியம் பேசும்` தப்புலிகள், `` இறந்தவர்களை நினைவு கூரல்``, `` சட்டபூர்வமாக நினைவேந்துதல்``, `` மாவீரர் கனவு அதிகாரப் பகிர்வு`` என பிதற்றி பித்தலாட்டம் செய்து வருகின்றனர்.இம் மும்முனை முரண்பாட்டிற்கு தீர்வு கண்டு, மாவீரர்களின் தமிழீழக் கனவை அடையும் வண்ணம் ஈழப் புரட்சியைத் தொடர்வதே, மாவீரர் நினைவேந்தலின் பேரால் நாமும் நமது தலைமுறையும் செய்ய வேண்டிய பணியாகும்.நிதி நிலை அறிக்கையும் நிதி மூலதன அடிமைத்தனமும்:2026ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை அதன் சாராம்சத்தில் IMF முதலீடு செய்த நிதிமூலதனக் கடன்களுக்கும், அதன் விளைவான வங்குரோத்து மீட்புக் கடனுக்கும் வட்டி கட்ட உள் நாட்டு மக்களிடம் வரி அறவிடுவதையே அடிப்படை இலக்காகக் கொண்டது.இது உண்மையில் என்னவென்றால் அந்நிய நிதி மூலதனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தேசிய மூலதனத்தை தாரை வார்ப்பதாகும். இந்த தேசிய மூலதனத்தை அந்நியருக்கு தாரை வார்ப்பது பொருளாதாரத் திட்டமாக உள்ளவரையில், உள் நாட்டுக்குள் மூலதனம் திரளாது. மூலதனம் இல்லாமல் (முதலாளித்துவ) பொருளாதாரம் வளராது.நாடு அபிவிருத்தி அடையாது.இலங்கை போன்ற ஒரு விவசாய நாட்டில் `அபிவிருத்தி` என்பது விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதே ஆகும்.1948 அதிகாரக் கைமாற்றம் முதல், இந்த நாட்டின் நாடாளமன்ற ஆட்சியாளர்கள் இதை அறவே கைவிட்டு விட்டனர்.நமது மன்னர்கள் கட்டி விட்ட குளங்கள், மற்றும் நம் முன்னோர் காலாதி காலமாக உருவாக்கி நிலைநிறுத்திய உலகத் தரமிக்க நீர்ப்பாசனக் கட்டமைப்பு எல்லாம் சிதைய விடப்பட்டுவிட்டது.பெருவீதத் தொழிற் துறை வளர்ச்சிக்கு ஏற்ப அவை நவீன மயப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் பெருவீதத் தொழிற் துறை வளர்ச்சி உலக வங்கியால் தடை செய்யப்பட்டிருந்தது, இன்னும் இருக்கின்றது.இவ்வாறு விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு எதிரான ஒரு ஆளும் கும்பலும், அரசு முறையும் ஊட்டி வளர்க்கப்பட்டு, ஆயுதபாணியாக்கப்பட்டு `நாடாளமன்ற தரகு ஜனநாயகம்` மூலம் இந்த மூதேவி மக்களின் தலை மேல் உட்கார்ந்து இருக்கின்றது.இவர்களால் ஆளப்படுகின்ற மக்கள், விவசாயிகள். அவர்களுடைய உயிர்வாழ்வுக்கான உற்பத்தி, உழைப்புச் சக்தி விற்பனை நிகழ்வது இந்த விவசாயப் பிரதேசத்தில், இந்த நிலையான விவசாயப் பிரதேசம் தான் தேசம்-A Nation. இது பொது மொழியாலும் பண்பாட்டு அம்சங்களாலும் பிணைக்கப்பட்டதாக அமைகின்றது. தேசத்துக்கான இதர எல்லா விளக்கங்களும் வியாக்கியானங்களும் முதலாளித்துவத் தேசியவாதத்தின் பொய் புரளிகள் தவிர வேறெதுவுமில்லை.இந்த இனம்,சிங்களவன் -தமிழன், ஆண்டபரம்பரை-குமரிக் கண்டம், துட்டகெமுனு-கரிகாலன், குபேனி வந்தது-சீதை போனது...இத்தியாதி இத்தியாதி எல்லாம், நிகழ்காலப் பேயாட்டத்தின் வர்க்க வேரை மூடிமறைக்க கடந்தகாலத்தில் இருந்து கடன்வாங்கிய பேய்கள்.இந்த இதிகாசங்களாலும் மதி மோசங்களாலும் உற்பத்திமுறையில் இருந்து எழும் விவசாயப் பிரச்சனையை மூடி மறைக்க இயலாது.மூர்க்கப் பிடிவாதமுள்ள வரலாறு அதை ஒருபோதும் அனுமதிக்காது.தேசியப் பிரச்சனை எவ்வாறு எழுகின்றது:தேசியப் பிரச்சனை எழுவதற்கான மூல காரணம் ஜனநாயகமற்ற அரசுமுறை நிலவுவதே ஆகும். காலனித்துவ காலத்தில் இலங்கையில் இருந்தது ஜனநாயக அரசுமுறை அல்ல. 1948 இற்குப் பிந்திய தொடர் காலனிய நாடாளமன்ற முறைமையில் தொடர்ந்து வளர்ந்ததும் ஜனநாயக அரசுமுறை அல்ல.முன்னையது காலனித்துவ நலனுக்காக முழு நாட்டையும் ஒன்றிணைத்து ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசுமுறை. பிந்தையது தொடர் காலனிய ஒடுக்குமுறைக்காக விவசாயப் பிரதேசங்களை மோதவிடுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசுமுறை. இவ்வாறு தான் தேசியப் பகைமையின் மீது கட்டப்பட்ட ஒரு பாசிச அரசு முறை இலங்கையில் உருவாகியது. இது தான் இலங்கையில் தேசியப் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணம்.எனவே தர்க்க ரீதியாக இலங்கையில் தேசியப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமானால் இலங்கையின் அரசுமுறை ஜனநாயக அரசுமுறையாக மாற்றப்படல் வேண்டும்.அனுரா ஆட்சி நிதி மூலதனத்துக்கு சேவகம் செய்கின்றது. தேசியப் பகைமையின் மீது கட்டப்பட்ட பாசிச அரசுமுறையைப் பாதுகாக்கின்றது. சோலைக் கிளியை வாரி அணைப்போம் ஆனால் சேலை இருக்கக் கூடாது, வாராது வந்துதித்தோம் ஆனால் ஆறாவது இருக்கும் என்கிறது! சுத்தம் செய்வதாகக் கூறி பாசிசத்தை பரிசுத்தம் செய்கின்றது.பாதாள உலகம் வரைக்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நாடுகளில் மைய அரசு நிலையான ஸ்திரமான ஆட்சியை நடத்துவது கடினம் என்பதை உலகின் வேறு பகுதிகளில் நாம் கண்டிருக்கின்றோம்.இதைக் கட்டுப்படுத்துவதில் மக்களுக்கு பலன் கிட்டுகின்ற அளவுக்கு அரசுக்கும் தேவை உண்டு. அந்தத் தேவை அனுரா அரசுக்கு மிக அதிகமாக உண்டு ஏனெனில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நாட்டில் வரி வசூலிக்க முடியாது!ஈழ தேசியப் புரட்சியின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? சமரச சக்திகள் யார்?ஈழ தேசியப் புரட்சியின் பிரதான இலக்கு இலங்கை அரசுமுறையை ஜனநாயகமயப்படுத்துவதாக இருப்பதால் தொடர் காலனியத்தின் ஆதரவு சக்திகள் எதுவும் ஈழப்புரட்சியின் நண்பர்களாக இருக்கமாட்டா. ஏகாதிபத்திய நாடுகளும், ஐ.நா போன்ற அதன் அடியாட்படைகளும், இந்திய விரிவாதிக்க அரசும் நமது எதிரிகள் ஆவர். உலகெங்குமுள்ள சோசலிச, ஜனநாயக, தேசிய சுதந்திர சக்திகள் நமது நண்பர்கள் ஆவர். சிங்கள தேசத்தின் முற்போக்கு ஜனநாயக உழைக்கும் பாட்டாளி மக்கள் நமது நண்பர்கள் ஆவர்.`தமிழ்த் தேசியம்`, `சிறுபான்மை இன மத தேசியம்`, மற்றும் தொப்புள் கொடி ஏவாளின் நச்சு மர அப்பிள்கள் அனைத்தும் தனிமைப்படுத்த வேண்டிய சமரச சக்திகள் ஆகும்.மாவீரர் நினைவேந்தல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!மாவீரர் நினைவேந்தல் ஒரு வருடாந்த சடங்காகி வருகின்றது. அதே அளவுக்கு அரசியல் அற்றதாக ஆக்கப்படுகின்றது. `இறந்தவரை நினைவு கூரல்` என்பது இது தான். இந்த இடைவெளியில் எதிர்ப்புரட்சியாளர்கள் நுழைய முடிகின்றது. இல்லையென்றால் ``மாவீரர் கனவு அதிகாரப் பகிர்வு`` `` அதை அனுரா நிறைவேற்றி வைக்க வேண்டும்`` என ஒரு புறம்போக்கால் பேசமுடியாது. இப்படிப்போனால், தமிழீழம் (பொங்கு தமிழ்-தாயகம் தேசியம் தன்னாட்சி-அக சுய நிர்ணய உரிமை) இடைக்கால அதிகார சபையாகி, முள்ளிவாய்க்கால் சமஸ்டி ஆகி, சமஸ்டி மாகாண சபை ஆகி, மாகாண சபை உள்ளூராட்சி சபையாகி, உள்ளூராட்சி தொல் பொருள் புத்தராட்சி ஆகிய கதையாகவே மாவீரர் நினைவும் போய் முடியும்.எனவே ஒரு ஜனநாயகத் திட்டத்தில்,`மாவீரர் நினைவேந்தல் மக்கள் இயக்கத்தை`க் கட்டியமைப்போம்! இல்லையேல் வாக்கு, வரி கொடா இயக்கம் அமைப்போம்!!(தொடரும்)