UPI ID : enb@axis.com
தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் நினைவேந்தலுக்குத் தயாராகும் தாயகம்!பார்த்தீபன்-ஈழம்-22-11-2026தமிழ்த் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா பொலிஸாரின் தலையீடுகளும் அச்சுறுத்தல்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நினைவேந்தலுக்காக அமைக்கப்பட்ட பதாகைகள் அகற்றப்படுவதும், ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதும், நினைவுகூரும் உரிமைக்கு எதிரான அரச ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. ஆட்சி மாறினாலும் தமிழர்களின் நினைவுகளை ஒடுக்கும் அரசியல் மாறவில்லை என்ற கொடுமையான யதார்த்த நிலையை இந்தச் சம்பவங்கள் மீண்டும் உணர்த்தி நிற்கின்றன.கிளிநொச்சியில் பொலிஸாரின் அத்துமீறல்கிளிநொச்சி டிப்போச் சந்திப் பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் வீதி வளைவுகள் நள்ளிரவு வேளையில் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஏற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அகற்றப்பட்ட பதாகைகள் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அங்கிருந்தவர்களுடன் முரண்பட்டதுடன், தகாத மற்றும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். எட்டுப் பேரையும் கைது செய்தபோது, “பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு இங்கு எவருக்கும் இடமில்லை” என்று பொலிஸார் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட எட்டுப் பேரிடமும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், பொலிஸ் நிலையத்துக்கு எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அகற்றப்பட்ட பதாகைகள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக மாவீர்ர் தினத்தின்போது கிளிநொச்சியில் வைக்கப்பட்ட பதாகைகளே இவ்வாறு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.நினைவுகூரலுக்கும் பொலிஸ் அனுமதி தேவையா?மாவீரர் நினைவேந்தல் என்பது தமிழர் சமூகத்தின் வரலாற்று நினைவோடும், போரின் கூட்டு அனுபவங்களோடும், இழப்புகளோடும் பின்னிப் பிணைந்த ஒன்று. போரில் உயிரிழந்த தமது பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை நினைவுகூர்வது குடும்பங்களின் உணர்வுரிமை. அத்துடன் அது சர்வதேச நியதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூகத்தின் நினைவுரிமையுமாகும்.ஆனால், இந்த அடிப்படையான உரிமையைக்கூட ஒவ்வொரு ஆண்டும் பொலிஸ் தலையீடுகளுக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும் மத்தியில் நிலைநாட்ட வேண்டிய சூழலுக்கு ஈழத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். துயிலும் இல்லங்களைச் சுத்தப்படுத்துவது, நினைவிடங்களை ஒழுங்குபடுத்துவது, பதாகைகள் அமைப்பது, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என ஒவ்வொரு நடவடிக்கையிலும் அச்சுறுத்தல்களும் தடைகளும் குறுக்கிடுகின்றன.மாவீரர் நினைவேந்தலைப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தும் பொலிஸாரின் இத்தகைய அணுகுமுறை அடிப்படையிலேயே கேள்விக்குரியது. இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைப் பயங்கரவாதம் என்ற சொல்லால் மறுக்க முடியாது. மக்களின் நினைவுகூரும் உரிமையைப் பறிப்பது என்பது சர்சவதேச சட்டங்களுக்கு மாறான மிகவும் அடக்குமுறைச் செயற்பாடாகும்.ஆட்சி மாறியும் அணுகுமுறை மாறவில்லையா?அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, தமிழர் தாயகத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகின. கடந்தகால அரசாங்கங்களின் ஒடுக்குமுறை அணுகுமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பாகப் புதிய ஆட்சி பார்க்கப்பட்டது. இனப்பிரச்சினை, அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், இராணுவ ஆக்கிரமிப்பு, நினைவேந்தல் உரிமை உள்ளிட்ட விடயங்களில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் காணப்பட்டது.ஆனால், மாவீரர் நினைவேந்தல் விடயத்தில் தொடரும் பொலிஸ் தலையீடுகள் அந்த எதிர்பார்ப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. நினைவேந்தல் ஏற்பாடுகளுக்காக நள்ளிரவில் பதாகைகள் அகற்றப்படுவதும், ஏற்பாட்டாளர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுவதும், நினைவுகூர்வதற்கான உரிமை தொடர்பில் பொலிஸார் அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்துவதும் புதிய அரசாங்கத்தின் ஜனநாயக அணுகுமுறை குறித்த முகத்தை நன்றாக வெளிப்படுத்துகின்றன.தடைகளின் மத்தியிலும் தயாராகும் தாயகம்இப்படியாக நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகம் மாவீரர் நாளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. துயிலும் இல்லங்களைத் துப்புரவு செய்வது முதல் நினைவிடங்களை ஒழுங்குபடுத்துவது வரை மக்கள் தங்களால் இயன்ற பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், இளைஞர்கள் எனப் பலரும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த காலங்களில் இராணுவக் கண்காணிப்புக்கும் பொலிஸ் விசாரணைகளுக்கும் மத்தியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. துயிலும் இல்லங்களுக்குச் செல்வதற்கும், விளக்கேற்றுவதற்கும், மலர் தூவுவதற்கும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட காலங்களும் இருந்தன. ஆயினும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தமது நினைவுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தனர்.மாவீரர் துயிலும் இல்லங்கள் என்பது ஒரு தமிழ் இனத்தின் அரசியல் வரலாற்றையும், போரின் நினைவுகளையும், இழப்புகளையும் சுமந்து நிற்கும் வரலாற்று அடையாளங்கள். அவற்றைச் சுற்றி உருவாகும் மக்கள் ஒன்றுகூடல் என்பது ஶ்ரீலங்கா அரசின் கண்களில் தெரிவதைப்போல வெறுமனே ஒரு நிகழ்வல்ல. மறக்கப்படுவதற்கு எதிராக தமிழினம் தனது நினைவுகளை நிலைநிறுத்தும் ஒரு போராட்டமாகும். இவ்வாறு பதாகைகளை அகற்றுவதன் மூலம் மக்களின் நினைவுகளை அகற்றிவிட முடியாது. நினைவிடங்களுக்கான பாதைகளைத் தடுத்து நிறுத்துவதால் வரலாற்றின் பாதையை மூடிவிடவும் முடியாது.நினைவேந்தல் உரிமையை தடுக்காதே! பறிக்காதே!!போரில் இறந்தவர்களை நினைவுகூரத் தடையில்லை என்று ஶ்ரீலங்கா மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். இப்படித்தான் காலம் காலமாக அரசு சொல்கிறது. ஆனால் இப்படிச் சொல்லிவட்டுத் தாயகத்தில் அடக்குமுறைகளை அவிழ்த்து விடுகிறது. எனவே மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நினைவேந்தல் ஏற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்துவதையும், கைது செய்வதையும், நினைவுச் சின்னங்களையும் பதாகைகளையும் அகற்றுவதையும் நிறுத்த வேண்டும். கிளிநொச்சியில் அகற்றப்பட்ட பதாகைகளை மீளக் கையளிப்பதுடன், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படக்கூடாது.எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான மக்களின் உரிமையை பறிப்பதே வழக்கமாகத் தொடர்கிறது. அனுர ஆட்சியே, மாவீரர் நினைவேந்தலில் கை வைக்காதே! துயிலும் இல்லங்களை நோக்கிச் செல்லும் மக்களின் பாதைகளை மறிக்காதே! தமிழர்களின் நினைவுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்காதே!இவ்வாறாகத் தடைகள் இருந்தாலும் தமிழர் தாயகம் தயாராகிறது. அச்சுறுத்தல்கள் இருந்தாலும் மக்கள் மாவீரர்களை நினைவுகூரத் தயாராகிறார்கள். ஏனெனில், நினைவுகூர்வது என்பது மக்களின் உரிமை. அந்த உரிமையைப் பறிப்பதற்கு ஶ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் அதிகாரம் இல்லை. இத்தகைய அடக்குமுறைகள் தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை இன்னமும் எழுச்சிகரமாக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜென்சன் ஹுவாங்கின் விவகாரத்திலிருந்து சீனா கற்றுக்கொண்ட பாடம் என்ன?குளோபல் டைம்ஸ் மூலம்வெளியிடப்பட்டது: நவம்பர் 24, 2026ஜென்சன் ஹுவாங். புகைப்படம்: விசிஜிபதினொரு நாட்களுக்கு முன்பு, ஜென்சன் ஹுவாங் என்விடியாவிலிருந்து வெளியேறுவார் என்று கிட்டத்தட்ட யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். பதினொரு நாட்களுக்குப் பிறகு, மிகச் சிலரே கணித்திருக்கக்கூடிய ஒரு வழியில், அவர் திரும்பி வந்து, நிறுவனத்தின் அதிகார அமைப்பின் மையத்தில் தனது இடத்தை மீண்டும் கைப்பற்றினார்.வெறும் பதினொரு நாட்களில், சில அமெரிக்க ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இந்த நிகழ்வை வதந்திகள், சதி கோட்பாடுகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு ஹாலிவுட் பாணிக் காட்சியாக மாற்றினர்.அதன் பிறகு? ஹுவாங் திரும்பி வந்துவிட்டார், "தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை." "அவர் எங்களுடன் இருப்பது அச்சுறுத்தலா? இல்லை, அவரை இழப்பதுதான் அச்சுறுத்தல்," என்று அமெரிக்க ஜனாதிபதி அவரது வருகையை நியாயப்படுத்திக் கூறினார்.சில மேற்கத்திய ஊடகங்கள் வாரக்கணக்கில் அவரைப் பற்றிய அவதூறுகளைத் தோண்டி, அவரை ஒரு "உளவுக்காரர்" என்று முத்திரை குத்தி, தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் மிகவும் சிக்கலான ஒரு நபராகச் சித்தரித்தன. அடுத்து என்ன நடந்தது என்பதை விளக்குவதில் அவர்கள் சிரமப்படலாம். இதோ அவர்: ஜென்சன் ஹுவாங், அடர் நீல நிற ஜாக்கெட்டில் என்விடியா தலைமையகத்திற்குள் மீண்டும் கம்பீரமாக நடந்து வருகிறார்; ஆரவாரம் செய்யும் ஊழியர்கள், உயர்த்தப்பட்ட தொலைபேசிகளின் காடு மற்றும் இடிபோன்ற கைதட்டல்களால் அவர் வரவேற்கப்படுகிறார். ஃபைனான்சியல் டைம்ஸ் ஒரு கசப்பான கருத்தைத் தெரிவித்தது, ஹுவாங்கின் மீள்வருகையை "நெறிமுறைகளை விட பணத்தின் வெற்றி" என்று சித்தரித்தது.ஆனால் உண்மையில் அதுதான் நடந்ததா? ஹுவாங்கின் தலைவிதி ஒருபோதும் அவரது தனிப்பட்ட நடத்தை சார்ந்த விஷயமாக இருக்கவில்லை. அவரது எதிர்காலம், தேர்தல்கள், அரசியல் உட்பூசல்கள், குறைக்கடத்திகள் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய ஆட்டத்தில் ஒரு பகடைக்காயாக மாறியது. அனைத்து அரசியல் சூழ்ச்சிகளுக்கும் கணக்கீடுகளுக்கும் பிறகு ஒரு விஷயம் தெளிவாகியதால் அவர் மீண்டும் திரும்பினார்: முற்றிலும் ஆதாரமற்ற முறையில் புனையப்பட்ட, உளவு குற்றச்சாட்டுகள் என்று சொல்லப்படுபவை, ஒரு அரசியல் பழிவாங்கல் வேட்டையைத் தவிர வேறொன்றுமில்லை; என்விடியாவிற்கும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவுத் துறைக்கும் இன்னும் அவர் தேவைப்படுகிறார்.வாஷிங்டனில் உள்ள சில அரசியல்வாதிகள் செயற்கை நுண்ணறிவு கணக்கீட்டுத் துறையைப் பங்கிட்டுக்கொள்ளப் போட்டி போடும் வேளையில், சிலிக்கான் பள்ளத்தாக்கின் பொறியாளர்கள் தங்கள் கைதட்டல்கள் மூலம் முற்றிலும் மாறுபட்ட ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர்: அரசியல் எதிரிகளை உருவாக்கலாம், ஆனால் தொழில்நுட்பப் போட்டி இறுதியில் நிஜ உலகத் திறன்களின் மூலமே வெல்லப்படுகிறது.அரசியல் பழிவாங்கல் வேட்டைகள் மூலமாகவோ அல்லது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை முடிவில்லாமல் விரிவுபடுத்துவதன் மூலமாகவோ நீங்கள் செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் வெற்றி பெற முடியாது. எப்படி உருவாக்குவது, புதுமைப்படுத்துவது மற்றும் வழங்குவது என்று தெரிந்தவர்களைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலமே நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். "தேசியப் பாதுகாப்பு" என்று வாதிடுபவர்களுக்கு GPU-க்களைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கலாம். ஆனால், அவற்றை உண்மையில் வடிவமைத்து உருவாக்குபவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் முன்னணியில் இருப்பதற்கு என்ன தேவை என்பது தெரியும்.ஹுவாங் சம்பவம், அமெரிக்காவில் வணிகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு, அந்நாட்டின் வணிகச் சூழல், மற்றும் பெருநிறுவன அதிகாரம் உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து உலகளாவிய சந்தைகளுக்கு ஒரு புதிய மற்றும் நிதானமான கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவிதி ஒருபோதும் சந்தை சக்திகளாலும் தொழில்நுட்பத் திறமையாலும் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அது அரசியலுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது, இது மிகப்பெரிய நிறுவனங்களைக் கூட கட்சிச் சண்டைகள், புவிசார் அரசியல் போட்டிகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஆளாகக்கூடியதாக ஆக்குகிறது.என்விடியா போன்ற சக்திவாய்ந்த ஒரு நிறுவனத்திற்குக் கூட, அதன் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது போன்ற ஒரு அடிப்படை விஷயத்தை உண்மையில் யார் தீர்மானிக்க முடியும்? இந்த நிகழ்வுக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களும் முதலீட்டாளர்களும், அமெரிக்காவில் வணிகம் செய்வது பற்றியும், பெருநிறுவனங்களும் அரசாங்கமும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்பது பற்றியும், பெருநிறுவன சுதந்திரம் உண்மையில் என்ன என்பது பற்றியும் தாங்கள் அறிந்திருந்ததாக நினைத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.ஹுவாங் மீண்டும் வந்துவிட்டார், ஆனால் புயல் இன்னும் ஓயவில்லை. மேலும் பல விசாரணைகளும் ஆய்வுகளும் வரவிருக்கின்றன, மெக்கார்த்தியிசத்தின் காற்று இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது. இந்த கேலிக்கூத்து, அமெரிக்க வணிகச் சூழல் எவ்வளவு கணிக்க முடியாததாகவும் அரசியல்மயமாக்கப்பட்டதாகவும் மாறியுள்ளது என்பதைக் காட்டியுள்ளது, மேலும் இது சீனாவிற்கு ஒரு தெளிவான நினைவூட்டலையும் அளித்துள்ளது. சீனாவின் தொழில்நுட்பத் துறை மீது வாஷிங்டன் விதித்துள்ள ஒவ்வொரு கட்டுப்பாடும், அரசியல் தலையீடும், தேசியப் பாதுகாப்பு ஆய்வு என்று சொல்லப்படுவதும் ஒரே பாடத்தைத்தான் வலுப்படுத்துகின்றன: தொழில்நுட்பத் தன்னிறைவுக்கான தனது உந்துதலை விரைவுபடுத்தி, முழுமையாக ஒருங்கிணைந்த, சுதந்திரமான குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியை உருவாக்குவதைத் தவிர சீனாவிற்கு வேறு வழியில்லை.ஜென்சன் ஹுவாங்கின் இந்த நிகழ்விலிருந்து சீனா கற்றுக்கொண்ட பாடம் என்ன?அமெரிக்க அரசியலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான அபத்தமான உறவைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை - அல்லது, இன்னும் எளிமையாகச் சொன்னால், அமெரிக்க அரசியல் நாடகத்தின் மற்றொரு அத்தியாயம்.
மாவீரர்களே, உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்! மாவீரர் நாள் கவிதை.( அரசவைப் புலவபுதுவை இரத்தினதுரை)மாரிமழை பொழியும், மண்கசியும் ஊர்முழுதும் வாரியடித்து வெள்ளம் வான்பாயும் கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்- துயிலுமில்லச் சாமிகளுக்கான சந்தனநாள் வந்தடையும்.மாவீரச்செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள்.விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள்.தமிழீழம் விடியும் என நம்பிப் பாடும் நாள்.விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான்,குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம் இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு.சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு என நிமிர்ந்து பேசும்படியான புதுவாழ்வின் புலர்வுதினம்.புனிதர்களின் துயிலுமில்லம் விழிசொரியும் உறவுகளால் விளங்கும்.உள்ளுறங்கும் பிள்ளைகளின் வாய்கள் பேசுவது காதுவிழும்.பள்ளிகொள்வோர் எம்மைப் பார்ப்பதையும் விழியுணரும்.நாமழுதால் சிரிக்குமொலி நாற்திசையும் எதிரொலிக்கும்.தாயழுதால் அம்மா தளராதே எனுமொற்றைச் சொல்லே துயிலுமில்லச் சூழலிலே கேட்டிருக்கும்.பூச்சொரிந்து, நெய்விளக்கில் பொறியேற்றி, விழிசொரிந்து, கார்த்திகையில் அந்நாள் கலங்கி, வெளியில்வர பூத்திருக்கும்,நம்பிக்கைப் பூ…!!!