நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் நினைவேந்தலுக்குத் தயாராகும் தாயகம்…

COP31 climate talks fail after stand-off over fossil fuels

சென்ற வாரம் இலங்கை-சண்டே ரைம்ஸ்

தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் நினைவேந்தலுக்குத் தயாராகும் தாயகம்…

தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் நினைவேந்தலுக்குத் தயாராகும் தாயகம்!பார்த்தீபன்-ஈழம்-22-11-2026தமிழ்த் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா பொலிஸாரின் தலையீடுகளும் அச்சுறுத்தல்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நினைவேந்தலுக்காக அமைக்கப்பட்ட பதாகைகள் அகற்றப்படுவதும், ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதும், நினைவுகூரும் உரிமைக்கு எதிரான அரச ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. ஆட்சி மாறினாலும் தமிழர்களின் நினைவுகளை ஒடுக்கும் அரசியல் மாறவில்லை என்ற கொடுமையான யதார்த்த நிலையை இந்தச் சம்பவங்கள் மீண்டும் உணர்த்தி நிற்கின்றன.கிளிநொச்சியில் பொலிஸாரின் அத்துமீறல்கிளிநொச்சி டிப்போச் சந்திப் பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் வீதி வளைவுகள் நள்ளிரவு வேளையில் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஏற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அகற்றப்பட்ட பதாகைகள் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அங்கிருந்தவர்களுடன் முரண்பட்டதுடன், தகாத மற்றும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். எட்டுப் பேரையும் கைது செய்தபோது, “பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு இங்கு எவருக்கும் இடமில்லை” என்று பொலிஸார் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட எட்டுப் பேரிடமும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், பொலிஸ் நிலையத்துக்கு எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அகற்றப்பட்ட பதாகைகள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக மாவீர்ர் தினத்தின்போது கிளிநொச்சியில் வைக்கப்பட்ட பதாகைகளே இவ்வாறு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.நினைவுகூரலுக்கும் பொலிஸ் அனுமதி தேவையா?மாவீரர் நினைவேந்தல் என்பது தமிழர் சமூகத்தின் வரலாற்று நினைவோடும், போரின் கூட்டு அனுபவங்களோடும், இழப்புகளோடும் பின்னிப் பிணைந்த ஒன்று. போரில் உயிரிழந்த தமது பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை நினைவுகூர்வது குடும்பங்களின் உணர்வுரிமை. அத்துடன் அது சர்வதேச நியதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூகத்தின் நினைவுரிமையுமாகும்.ஆனால், இந்த அடிப்படையான உரிமையைக்கூட ஒவ்வொரு ஆண்டும் பொலிஸ் தலையீடுகளுக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும் மத்தியில் நிலைநாட்ட வேண்டிய சூழலுக்கு ஈழத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். துயிலும் இல்லங்களைச் சுத்தப்படுத்துவது, நினைவிடங்களை ஒழுங்குபடுத்துவது, பதாகைகள் அமைப்பது, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என ஒவ்வொரு நடவடிக்கையிலும் அச்சுறுத்தல்களும் தடைகளும் குறுக்கிடுகின்றன.மாவீரர் நினைவேந்தலைப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தும் பொலிஸாரின் இத்தகைய அணுகுமுறை அடிப்படையிலேயே கேள்விக்குரியது. இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைப் பயங்கரவாதம் என்ற சொல்லால் மறுக்க முடியாது. மக்களின் நினைவுகூரும் உரிமையைப் பறிப்பது என்பது சர்சவதேச சட்டங்களுக்கு மாறான மிகவும் அடக்குமுறைச் செயற்பாடாகும்.ஆட்சி மாறியும் அணுகுமுறை மாறவில்லையா?அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, தமிழர் தாயகத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகின. கடந்தகால அரசாங்கங்களின் ஒடுக்குமுறை அணுகுமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பாகப் புதிய ஆட்சி பார்க்கப்பட்டது. இனப்பிரச்சினை, அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், இராணுவ ஆக்கிரமிப்பு, நினைவேந்தல் உரிமை உள்ளிட்ட விடயங்களில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் காணப்பட்டது.ஆனால், மாவீரர் நினைவேந்தல் விடயத்தில் தொடரும் பொலிஸ் தலையீடுகள் அந்த எதிர்பார்ப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. நினைவேந்தல் ஏற்பாடுகளுக்காக நள்ளிரவில் பதாகைகள் அகற்றப்படுவதும், ஏற்பாட்டாளர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுவதும், நினைவுகூர்வதற்கான உரிமை தொடர்பில் பொலிஸார் அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்துவதும் புதிய அரசாங்கத்தின் ஜனநாயக அணுகுமுறை குறித்த முகத்தை நன்றாக வெளிப்படுத்துகின்றன.தடைகளின் மத்தியிலும் தயாராகும் தாயகம்இப்படியாக நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகம் மாவீரர் நாளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. துயிலும் இல்லங்களைத் துப்புரவு செய்வது முதல் நினைவிடங்களை ஒழுங்குபடுத்துவது வரை மக்கள் தங்களால் இயன்ற பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், இளைஞர்கள் எனப் பலரும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த காலங்களில் இராணுவக் கண்காணிப்புக்கும் பொலிஸ் விசாரணைகளுக்கும் மத்தியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. துயிலும் இல்லங்களுக்குச் செல்வதற்கும், விளக்கேற்றுவதற்கும், மலர் தூவுவதற்கும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட காலங்களும் இருந்தன. ஆயினும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தமது நினைவுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தனர்.மாவீரர் துயிலும் இல்லங்கள் என்பது ஒரு தமிழ் இனத்தின் அரசியல் வரலாற்றையும், போரின் நினைவுகளையும், இழப்புகளையும் சுமந்து நிற்கும் வரலாற்று அடையாளங்கள். அவற்றைச் சுற்றி உருவாகும் மக்கள் ஒன்றுகூடல் என்பது ஶ்ரீலங்கா அரசின் கண்களில் தெரிவதைப்போல வெறுமனே ஒரு நிகழ்வல்ல. மறக்கப்படுவதற்கு எதிராக தமிழினம் தனது நினைவுகளை நிலைநிறுத்தும் ஒரு போராட்டமாகும். இவ்வாறு பதாகைகளை அகற்றுவதன் மூலம் மக்களின் நினைவுகளை அகற்றிவிட முடியாது. நினைவிடங்களுக்கான பாதைகளைத் தடுத்து நிறுத்துவதால் வரலாற்றின் பாதையை மூடிவிடவும் முடியாது.நினைவேந்தல் உரிமையை தடுக்காதே! பறிக்காதே!!போரில் இறந்தவர்களை நினைவுகூரத் தடையில்லை என்று ஶ்ரீலங்கா மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். இப்படித்தான் காலம் காலமாக அரசு சொல்கிறது. ஆனால் இப்படிச் சொல்லிவட்டுத் தாயகத்தில் அடக்குமுறைகளை அவிழ்த்து விடுகிறது. எனவே மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நினைவேந்தல் ஏற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்துவதையும், கைது செய்வதையும், நினைவுச் சின்னங்களையும் பதாகைகளையும் அகற்றுவதையும் நிறுத்த வேண்டும். கிளிநொச்சியில் அகற்றப்பட்ட பதாகைகளை மீளக் கையளிப்பதுடன், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படக்கூடாது.எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான மக்களின் உரிமையை பறிப்பதே வழக்கமாகத் தொடர்கிறது. அனுர ஆட்சியே, மாவீரர் நினைவேந்தலில் கை வைக்காதே! துயிலும் இல்லங்களை நோக்கிச் செல்லும் மக்களின் பாதைகளை மறிக்காதே! தமிழர்களின் நினைவுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்காதே!இவ்வாறாகத் தடைகள் இருந்தாலும் தமிழர் தாயகம் தயாராகிறது. அச்சுறுத்தல்கள் இருந்தாலும் மக்கள் மாவீரர்களை நினைவுகூரத் தயாராகிறார்கள். ஏனெனில், நினைவுகூர்வது என்பது மக்களின்  உரிமை. அந்த உரிமையைப் பறிப்பதற்கு ஶ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் அதிகாரம் இல்லை. இத்தகைய அடக்குமுறைகள் தமிழர் தாயகத்தில்  மாவீரர் தின நிகழ்வுகளை இன்னமும் எழுச்சிகரமாக்கும் என்பதில் ஐயமில்லை. 

COP31 climate talks fail after stand-off over fossil fuels

Data visualisation by Steven BernardCOP31 climate talks fail after stand-off over fossil fuelsGeopolitical divides laid bare in fracture between Arab group and EU-led coalitionAttracta Mooney and Kenza Bryan in AntalyaFT 22-11-2026The world’s most important climate talks have failed to reach agreement after an irretrievable rift between a group of countries led by Saudi Arabia and another coalition backed by the EU.The EU, UK, Norway, Canada, Panama, Vanuatu and a group known as the “least developed countries” were among those that said they could not back the main COP31 agreement as it did not mention the role of fossil fuels in climate change.“It is unconscionable that we would have a climate pact that makes no reference to fossil fuels — and no reference to transition away from fossil fuel either,” said Darragh O’Brien, climate minister for Ireland which holds the rotating EU presidency, to applause at the final meeting of almost 200 countries.“We will not endorse a decision that does not respond to the science and that actually risks deepening the chasm between global commitments and the action required,” he added.The failure of the negotiations reflects wider geopolitical tensions that drove the fortnight of talks into two days of overtime, making it the longest COP session convened by the UN in 31 years. The last talks to fail to reach a final agreement were in Copenhagen in 2009.The so-called Antalya accord ran into insurmountable conflicts over a fossil fuels phase-out and the push by oil and gas producers for carbon capture technology. It also faced long-running disputes over goals for funding to cope with climate change and even over the scientific reports.This year’s gathering was held against the backdrop of the energy crisis and economic stresses, as well as months of intense heat, fires and floods, with catastrophic disasters in countries such as Nepal.Saudi Arabia’s representative defended the backing of carbon capture technologies by the Arab group of 22 nations, which would allow for continued oil and gas production.“If climate change is, as some have mentioned today, so important, it makes no sense that concrete solutions will be taken off the table,” he said, adding that the Arab group would “continue to be constructive”.As the final meeting became fractious, Saudi Arabia was backed by Qatar, Iran and Russia, among other petrostates. “We cannot agree to any wording on fossil fuels,” a representative for Russia said.The world’s biggest emitter on an annual basis, China also accepted the proposed agreement put forward without mention of fossil fuels, as did India.COP31 president Murat Kurum said Turkey, the host of the summit, and Australia, which was charged with overseeing the talks, had worked “around the clock” with countries to attempt to reach an agreement.Turkey’s flagship goal to reach 35 per cent global energy electrification by 2035 was one of the pillars of the agreement.“We have done our utmost; ultimately, we have not imposed this text on anyone, nor have we issued an ultimatum such as a ‘take it or leave it’ demand,” said Kurum. “We recognise ⁠that there is no consensus . . . therefore, these decisions have not been adopted.”UK energy secretary Miatta Fahnbulleh said COP31 had “sought to confront hard truths”, adding it was “immensely disappointing” that countries had failed to reach a consensus.This year’s climate summit was the first since a UN report said the rise in global temperature was set to overshoot 1.5C above the pre-industrial level, a threshold agreed by countries under the Paris accord more than a decade ago and beyond which extreme weather impacts intensify.The push for the inclusion of the transition away from fossil fuels in Antalya follows an agreement already reached at COP28 in Dubai, which the large contingent of countries at COP31 sought to have reinforced.“We cannot afford to see backsliding,” said a representative for Timor-Leste, speaking on behalf of the least developed countries. The proposed agreement was “weak” on responding to the “overshoot” of the 1.5C threshold.Despite the breakdown of the main agreement, several measures, including a pledge, were agreed on a “just transition” for workers and communities reliant on fossil fuels.Palau’s minister for fisheries, environment and climate change Stephen Victor said COP31 was “not all a failure”, arguing progress had been made in other aspects of the talks, especially in putting a spotlight on oceans.However, UN secretary-general António Guterres, who is nearing the end of his term in office after being a fierce champion for climate issues, said he was “deeply disappointed” there was not consensus on an overarching outcome.“I share the very profound frustration of all those who expected governments to rise to the moment the climate crisis demands,” he added.

விடுதலை! ஜனநாயகம்! சுயநிர்ணயம்!

மாவீரர்களே, உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்! மாவீரர் நாள் கவிதை.( அரசவைப் புலவபுதுவை இரத்தினதுரை)மாரிமழை பொழியும், மண்கசியும் ஊர்முழுதும் வாரியடித்து வெள்ளம் வான்பாயும் கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்- துயிலுமில்லச் சாமிகளுக்கான சந்தனநாள் வந்தடையும்.மாவீரச்செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள்.விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள்.தமிழீழம் விடியும் என நம்பிப் பாடும் நாள்.விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான்,குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம் இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு.சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு என நிமிர்ந்து பேசும்படியான‌ புதுவாழ்வின் புலர்வுதினம்.புனிதர்களின் துயிலுமில்லம் விழிசொரியும் உறவுகளால் விளங்கும்.உள்ளுறங்கும் பிள்ளைகளின் வாய்கள் பேசுவது காதுவிழும்.பள்ளிகொள்வோர் எம்மைப் பார்ப்பதையும் விழியுணரும்.நாமழுதால் சிரிக்குமொலி நாற்திசையும் எதிரொலிக்கும்.தாயழுதால் அம்மா தளராதே எனுமொற்றைச் சொல்லே துயிலுமில்லச் சூழலிலே கேட்டிருக்கும்.பூச்சொரிந்து, நெய்விளக்கில் பொறியேற்றி, விழிசொரிந்து, கார்த்திகையில் அந்நாள் கலங்கி, வெளியில்வர‌ பூத்திருக்கும்,நம்பிக்கைப் பூ…!!!

மேலும் படிக்க