UPI ID : enb@axis.com
தொற்றுநோய் மற்றும் பேரிடரை நிரூபணம் வேண்டிய சாத்தியப்பாடுகள் என அனுமானிக்கின்றது.Jaffna Monitor யாழ்ப்பாணம், இலங்கை — இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய கூட்டுப் புதைகுழியான செம்மணியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்த முதல் நிபுணர் அறிக்கை, அங்கு மீட்கப்பட்ட 583 பேரின் எச்சங்களில் சில, ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவில் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கிறது.“யாழ்ப்பாணம் செம்மணியில் தடயவியல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி (2025/2026): கண்டுபிடிப்புகள் குறித்த சுருக்க அறிக்கை” என்ற தலைப்பிலான 190 பக்க அறிக்கை, அகழ்வாராய்ச்சியின் பிரத்தியேக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் அனுஷா வன்னினாயக்க ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. திங்களன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, அத்தளத்தில் நடைபெற்ற 110 நாள் அகழ்வாராய்ச்சியை உள்ளடக்கியுள்ளது.அந்த நபர்கள் எவ்வாறு இறந்தார்கள், எப்போது அடக்கம் செய்யப்பட்டார்கள் அல்லது அவர்களை அடக்கம் செய்தது யார் என்பதை அந்த அறிக்கை தீர்மானிக்கவில்லை; மேலும், அது சட்டவிரோதக் கொலையையும் நிராகரிக்கவில்லை. அது ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவை மேலதிக ஆய்வு தேவைப்படும் சாத்தியக்கூறுகளாக முன்வைக்கிறது, ஆனால் அந்த நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்று நடந்ததா என்பதையும் அது நிறுவவில்லை.அதே விசாரணையில், கிரிஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான லான்ஸ் கார்ப்பரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் கூட்டுப் புதைகுழி தொடர்பாக விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அத்திணைக்களம் நீதிமன்றத்தில் இரண்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்து, திரு. ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியிருந்தது. செம்மணி வழக்கு தொடர்பாக நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆய்வு செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியது.அறிக்கையின்படி, அந்தப் புதைகுழி, நிறுவப்பட்ட இறுதிச் சடங்கு வழக்கங்களின்படி உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. செம்மணி தளம் மற்ற நாடுகளில் ஆவணப்படுத்தப்பட்ட கூட்டுப் புதைகுழிகளிலிருந்து முக்கியமான அம்சங்களில் வேறுபடுகிறது என்றும், அதன் தொல்பொருள் அம்சங்கள் முறைசார்ந்த அடக்கத்துடன் தொடர்புடைய தளங்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன என்றும் அது கூறுகிறது. எலும்புக்கூடு எச்சங்களின் செறிவு மட்டுமே அடக்கத்தின் சூழ்நிலைகளை நிறுவ முடியாது என்றும், அந்தச் சூழ்நிலைகளை உறுதியாகத் தீர்மானிக்கத் தேவையான சான்றுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.அதிக எண்ணிக்கையிலான உடல்கள் கண்டெடுக்கப்பட்டதற்கு ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடரே காரணமாக இருக்கலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது, ஏனெனில் இதுபோன்ற நிகழ்வுகள் அடக்கம் செய்வதற்கான அவசரத் தேவையை உருவாக்கக்கூடும். அவசரமாக அடக்கம் செய்யப்பட்ட உடல்கள், வழக்கமான இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்கு அதிக வாய்ப்பை அளித்திருக்காது. இறுதிச் சடங்குகளுடன் பொதுவாகத் தொடர்புடைய பொருட்கள் குறைவாகக் கண்டெடுக்கப்பட்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். மீட்கப்பட்ட சில சான்றுகள், முறையான இறுதிச் சடங்கு நடைமுறைகள் நடைபெற்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஆடைகள் இல்லாதது குறித்து இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எச்சங்களுடன் சேர்த்து எந்த துணி வகைகளும் பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டறியப்படவில்லை. மண்ணின் வேதியியல் தன்மை, ஈரப்பதம், நுண்ணுயிரிகளின் செயல்பாடு மற்றும் எச்சங்கள் எவ்வளவு காலம் புதைக்கப்பட்டிருந்தன என்பதைப் பொறுத்து துணி மற்றும் பிற கரிமப் பொருட்கள் சிதைவடையக்கூடும் என்பதால், இறந்தவர்கள் ஆடையின்றிப் புதைக்கப்பட்டனர் என்று இது அவசியமாகப் பொருள்படாது என ஆய்வின் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.சில எலும்புக்கூடுகளுடன் பொத்தான்கள், பொத்தான் துளை வளையங்கள் மற்றும் சிறிய உலோக ஆடைப் பொருத்திகள் மீட்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது, இறந்தவர்களில் குறைந்தபட்சம் சிலராவது புதைக்கப்பட்டபோது ஆடை அணிந்திருந்தனர் என்ற சாத்தியக்கூற்றை ஆதரிக்கிறது.இதற்கிடையில், செம்மணி கூட்டுப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு எச்சங்களை ஆய்வு செய்வதற்காக, அடுத்த வாரம் வாக்கில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று நீதித்துறை மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாயன்று தெரிவித்தார்.ஆசிரியர் குறிப்பு: Jaffna Monitor, மனு தாக்கல் செய்வதன் மூலமே பெறக்கூடிய, 190 பக்கங்கள் கொண்ட முழுமையான ஆவணத்தின் நகலை யாழ்ப்பாண அவகாசத்தில் கோரி வருகின்றனர். இந்தச் செயல்முறைக்குச் சிறிது காலம் ஆகலாம். அது எங்களுக்குக் கிடைத்தவுடன், அறிக்கையின் கண்டுபிடிப்புகளை முழுமையாக ஆராய்ந்து ஒரு விரிவான செய்தியை வெளியிடுவோம்.
Oil hits five-month high amid fears of fresh strikes on IranInvestors fear the Iran war could drag on, further limiting shipping through the Strait of Hormuz Credit: REUTERS/StringerChris Price-Markets Editor. Joe Sledge-Business Reporter 23 October 2026The price of oil has hit a five-month high amid fears Donald Trump will ramp up strikes in the Middle East following the midterm elections.Brent crude, the international benchmark, climbed as much as 2.8pc to more than $116 a barrel, pushing down stock markets in the US and Europe.It followed a New York Times report that the US and Israel had drawn up plans for renewed strikes against Iran after the midterm elections.Oil has climbed more than 4pc this week, increasing pressure on stock markets at the same time as fears grow about the valuations of AI companies.European shares fell on Friday, with the FTSE 100 down as much as 0.8pc, the Cac 40 in Paris down 1pc and the Dax in Frankfurt down 1.1pc.On Wall Street, the Dow Jones Industrial Average fell as much as 1pc, while the S&P 500 and Nasdaq Composite fell at a slower pace than the previous day.Traders were rattled on Thursday after Jensen Huang, Nvidia’s chief executive, warned that a “scarcity of capital” was hampering the rollout of the technology.The tech-heavy Nasdaq in New York dropped by 2.6pc on Thursday while the S&P 500 fell 1.2pc on its worst day since July.Mark Zuckerberg’s Meta was one of the worse hit in the sell-off, as its shares finished trading almost 7pc lower.Overnight, the sell-off spread into Asian markets. Japan’s Nikkei 225 dropped by as much as 2.3pc and was down more than 4pc on the week.The Kospi index in South Korea declined as much as 4.1pc on Friday but recovered to be marginally higher as markets closed.The stock market turmoil led to a jump in safe haven assets like bonds.The yield on 10-year US Treasury bonds, a benchmark for the cost of borrowing for governments around the world, fell by the largest amount since March 2023.
தியாகி திலீபன் சிலை பறிப்புENB அறிக்கைஈழம்-யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலை, இலங்கை போலீசாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ளது. திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு நாளின் இறுதி நாள் நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 27, 2026 அன்று அதிகாலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு 11 நாட்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, 12ம் நாள் தனது பொலிஸ் படையை ஏவி இந்தப் பேடித்தனமான செயலைச் செய்துள்ளது, ஜே,வி,பி சமூக தேசிய வெறியரின் அனுர அரசு,செப்டம்பர் 27 அதிகாலை வேளையில், சுமார் 15 முதல் 20 வரையிலான போலீசார் நல்லூர் நினைவிடத்திற்கு வந்து, சிலையின் பீடத்தை உடைத்து திலீபனின் சிலையை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தத் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் (CCTV) பதிவாகியுள்ளன.திலீபனின் நினைவு இல்லத்தில் கடந்த 39 வருடங்களாக மக்கள் அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்து வருகின்றனர்.முன்னைய சிலைகள் தகர்க்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 அன்று பொதுமக்களாலும்,சிவில் அமைப்புகளாலும்,அரசியல் கட்சிகளாலும் இந்தச் சிலை அங்கு நிறுவப்பட்டது.தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கும் நிலையில், இச்சிலை "சட்டவிரோதமானது" எனக் கூறி நீதிமன்ற அனுமதியுடன் தாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அத்தகைய எந்த ஆவணங்களையோ, சட்ட விளக்கங்களையோ பொலிசார் தமக்கு வழங்கவில்லையென தனது கண்டன உரையில் வேலன் சுவாமிகள் கூறியுள்ளார்,மேலும் இதன் சட்ட நியாயம் குறித்து சட்டத்துறையினரும் கேள்வி எழுப்பியுள்ளனர், ஏனெனில் மாவீரர் தினத்தில் அரசு அழுது புலம்புவதற்கு உரிமை வழங்கியிருந்தது, போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சிலை அகற்றப்பட்ட இடத்திற்கு மக்கள் தொடர்ந்து வருகை தந்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.1987 செப்டம்பரில் இந்திய அரசுக்கு எதிராக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் நல்லூரில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். அதற்குப் பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவுத் தூபி மற்றும் சிலைகள், கடந்த 1996, 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்டதும், தற்போது மீண்டும் அங்கு வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இதனால் நாடளாவிய வகையில் மக்கள் கொதித்து கொந்தளித்துள்ளனர்,இவ்வேளையில் சிலை தொடர்பாக ஓட்டுப் பொறுக்கி நாடாளமன்றக் கட்சிகளிடையே நாய்ச் சண்டை ஆரம்பமாகிவிட்டது, இவர்கள்தான் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விட்டுள்ளனர்,திலீபன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தவும், இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்தும் போராடி உயிர் நீத்தார்.இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்படப்போகும் தீங்கை முதல் முதலாக- ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக சுதுமலைப் பிரகடனத்தில் சுட்டிக்காட்டியவர் திரு,பிரபாகரன் மட்டுமே.இலங்கை நாடாளமன்றத்தில் கூட இந்த ஒப்பந்தம் விவாதிக்கப்படவில்லை.அதன் ஒரு பிரகிதிகளுக்கும் அதில் என்ன இருக்கின்றது என்று தெரியாது.இன்றும் பலருக்கு தெரியாதிருக்க வாய்ப்புண்டு.இதே போல் தான் அனுரா ஆட்சி இந்தியாவுடன் செய்து கொண்ட இரு இராணுவ ஒப்பந்தங்களும் விவாதிக்கப்படவில்லை, பகிரங்கப்படுத்தப்படவும் இல்லை.இலங்கை இராணூவத்துக்கு இந்தியா குருவி சுடப் பழக்கப் போகிறதோ என்னவோ அத்தகைய இரணுவ உபகரணங்களை விற்கவும், பயன்படுத்த பயிற்சி அளிக்கவும் இவ் ஒப்பந்தங்கள் வழி வகை செய்கின்றன!1987 இல் ஜே.வி.பி கும்பல் இந்திய இராணுவம் தமிழருக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்க வந்துள்ளது என்றுகூறி போராடியது.இந்தியப் படை வருகையால் பிரேமதாச ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்று கனவு கண்டது.மாத்தையா-பிரேமதாசா பேச்சுவார்த்தையில் இந்தியப் படையை வெளியேற்ற உடன்பாடு காணப்பட்டதால் அந்தக் கனவு பலிக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான அப்பாவி சிங்கள ஏழை விவசாயக் குடும்பங்களின் குழந்தைகளை பிரேமதாச அரசு நரபலி எடுத்தது.களனி ஆற்றில், ரயர்கள் கட்டி எரிக்கப்பட்ட சடலங்கள் தோணிகளாய் ஊர்வலம் போயின.இதற்கு காரணமான ஜே.வி.பி அரக்களைய மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.1987 இந்திய எதிர்ப்புப் போராளிகளுக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டவில்லை.ஆனால் இந்தியப் படையின் மண்டபதை மக்கள் வரிப்பணத்தில் பராமரித்துவருகின்றது,இப்போ ஈழத்தில் இந்திய விரிவாதிக்க எதிர்ப்புப் போராளி தியாகி திலீபனுக்கு மக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் நான்காவது தடவையாக கட்டியமைத்த சிலையை பெயர்த்து பறித்தெடுத்துச் சென்றுள்ளது.மொத்தம் எத்தனை காலனியாதிக்கப் பயங்கரவாதிகளுக்கு இலங்கையின் பட்டி தொட்டி எங்கும் சிலைகள் உண்டு, இது வெட்கம் இல்லையா!மாவீரர் தினத்தில் கதறி அழ அனுமதித்த சட்டம் இப்போது ஏன் தடை செய்கின்றது?`` இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை மண்ணில் இடமில்லை `` என்பதாலா?அப்போதும் கூட நாம் தான் கலாச்சார இரட்டையர்கள் ஆயிற்றே, உருவ வழிபாடு உங்களுக்கும் உரியது தானே!பாபர் மசூதியை இடித்துவிட்டு நீங்கள் இராமர் கோவில் கட்டவில்லையா? எங்கள் தெய்வங்களின் சிலைகளை மட்டும் ஏன் தகர்க்கின்றீர்கள்?`கண தெய்யோ நாண்ட கீயா` என்று லேபில் அணிந்து கணபதிக் கடவுளை கடலிலே வீசினீர்கள்; தமிழாராய்ச்சி மாநாட்டு சிலையை மொத்தம் எத்தனை தடவை தகர்த்தீர்கள், மாவீரன் மில்லரின் உருவச் சிலை, மாவீரர் துயிலுமில்லங்கள், சற்றுப் பின்னே போனால் (!981) ஒளவையார், கண்ணகி, கூடவே மோகன்லாலுக்கும் கை உடைத்தீர்கள்.அது சரி இந்த `தலை`, சிலை, ஆடல், பாடல் இதற்கெல்லாம் உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம்.ஒன்று வல்லரசு, மற்றது வல்லரசின் பொல் அரசு.நாட்டரசனையும், கூடவே பாட்டரசனையும் தின்று விழுங்கிவிட்டீர்கள், இப்போ அவன் எழுதிய் ஒரு பாட்டால் சரிந்து விழுகின்ற அளவுக்கா உங்கள் சாம்ராஜ்ஜியம் இருக்கின்றது.நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ நெருப்போடு மீண்டும் விளையாடுகின்றீர்கள்.திலீபன் சிலையை திருப்பி நிறுவுங்கள்.புதிய ஈழப் புரட்சியாளர்கள்.27-09-2026 ஈழம்