நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

அனுர ஆட்சியும் (2025) மாவீரர் தினமும்


யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்

மாவீரர் வாரம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள  நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வேலைகளில் நேற்று ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸ் படையின் கெடுபிடி

வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட சிவில் உடை தரித்த படங்கள் தாங்கிய பதாகைகளை அகற்ற சொன்ன பொலிஸார், பொதுமக்கள் சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

`` தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்கள், இலட்சனைகள் பயன்படுத்தப்படாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர முடியும்`` என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், நடைமுறையில் அது நிகழவில்லை. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் விசனப்பட்டனர்.

இதேவேளை நேற்று மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இலத்திரனியல் உபகரணத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை பொலிஸார் குறித்த உபகரணத்தை கைப்பற்றி வழக்கு சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர்.

மாவீரர் நாள், நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் தொடர்ந்து காணப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கிழக்கில் நில ஆக்கிரமிப்பு

இதேவேளை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் ஒரு பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட காணிகளில் மட்டும், 6 ``தொல் பொருள் இட(ம்)`` ஆக்கிரமிப்புப் பெயர்ப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இதனை எதிர்த்த பிரதேச சபை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டவிழ்த்து விடப்பட்ட காவிப்படையை பொலிஸ் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு மத்தியில் ஜனாதிபதியைச் சந்தித்த ``தமிழ்க் கட்சிகள்`` `எப்படியும் அழைக்கக் கூடிய ஏதாவது ஒன்றைக் கேட்டு` சந்திப்பை சுமூகமாக முடித்துக் கொண்டு செவ்வனே வீடு திரும்பியுள்ளன. சுபம்.

ஒத்தவை: