நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

பெளத்தத்திற்கு எதிர் என்றால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்


கல்வி சீர்திருத்தங்கள்-பெளத்தத்திற்கு எதிர் என்றால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்: மகா சங்கத்தினர் எச்சரிக்கை

ஜனவரி 11, 2026

பள்ளிகளில் கல்வி சீர்திருத்தங்கள் தேவைப்பட்டாலும், தற்போதைய நிர்வாகம் செய்துள்ள திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று மூத்த பேராசிரியர் வணக்கத்திற்குரிய பாதேகம ஞானிஸ்ஸர தேரர் குறிப்பிட்டார்.

தரமிட்டிபொல ரத்னசார தேரர் பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றும்போது வணக்கத்திற்குரிய ஞானிஸ்ஸர தேரர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

நாட்டின் கலாச்சாரத்தை அழித்து, பௌத்த பாரம்பரியத்தை அழித்து, நாட்டை அபிவிருத்தி செய்வது சாத்தியமற்றது என்று ஞானிஸ்ஸர தேரர் மேலும் வலியுறுத்தினார்.

வண. பாத்தேகம ஞானிஸ்ஸர தேரர் தெரிவித்த மேலதிக கருத்துக்கள்

"பள்ளிக் கல்வி சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் முன்மொழியப்படும் மாற்றம் சரியானதல்ல... அவர்கள் தலைமை பீடத்திற்குச் சென்று, 'நாங்கள் இணைப்பை மட்டுமே பகிர்ந்து கொண்டோம்; யாரையும் அதைப் பார்வையிடச் சொன்னதில்லை' என்று கூறுகிறார்கள். தலைமை பீடங்கள் சில ஆட்சியாளர்களைப் போல பகுத்தறிவற்றவர்கள் அல்ல. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பார்க்கும் ஞானம் அவர்களிடம் உள்ளது. அவர்கள் இந்தச் செயல்களைக் கவனித்து வருகின்றனர். நாட்டின் கலாச்சாரத்தை அழிப்பதன் மூலமும், சமூகத்தில் பொதிந்துள்ள பௌத்த பாரம்பரியத்தை நீக்குவதன் மூலமும் என்ன வகையான நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்?"

நிகழ்வில் பங்கேற்ற வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரர், தற்போதைய அரசாங்கத்திற்குள் பிரிவேனா கல்விச் சட்டத்தில்* தலையிட ஒரு திட்டம் கூட இருந்ததாகக் கூறினார்.

பிரிவேனா சட்டத்தில் தலையிடுவதற்கு தலைமை தேரர்கள் அனுமதி வழங்கவில்லை, ஆனால் பிரிவேனா கல்வி முறையில் சீர்திருத்தங்களை மட்டுமே அனுமதித்ததாக அபயதிஸ்ஸ தேரர் மேலும் விளக்கினார்.

மேலும் கருத்து தெரிவித்த வண. அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்ததாவது,

பிரிவேனா சட்டத்தில் கை வையாதே!

"பிரிவேனா சட்டத்தில் கூட தலையிட அவர்கள் திட்டமிட்டனர். பிரிவேனா சட்டத்தை மாற்றியமைக்க தலைமை பீடங்கள் அனுமதி வழங்கவில்லை. பிரிவேனா கல்வியில் சீர்திருத்தங்களை மட்டுமே அவர்கள் அனுமதித்தனர். எனவே, துறவிகள் விழிப்புடன் இருக்குமாறு நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பௌத்த ஒழுங்கிற்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய தடைகள் அல்லது அச்சுறுத்தல்கள் இருந்தால், நாம் அமைதியாக இருக்க முடியாது. அது அழிக்கப்பட்டால், அதை மீண்டும் கட்டியெழுப்ப எங்களுக்கு இடமில்லை."

---------------------------------------------

*பிரிவேனா என்பது, இலங்கையில் புத்த மதகுருமாருக்கான கல்வியை வழங்கும் நிறுவனங்களைக் குறிக்கும். பழைய காலத்தில் சாதாரண மக்கள் இடைநிலைக் கல்வியையும், உயர் கல்வியையும் பெற்றுக்கொள்வதற்கும் பிரிவேனாக்கள் உதவின. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய பிரிவேனாக் கல்விமுறை இன்றும் இலங்கையில் இருந்து வருகிறது. தற்போது இலங்கையின் கல்வி அமைச்சு பிரிவேனாக்களை நடத்தி வருகிறது. இளம் பிக்குகள் குருநிலைக்கு உயர்த்தப்படுமுன் பிரிவேனாக்களில் பயிற்சி பெறுகின்றனர்.

ஒத்தவை: