நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

வெனிசுவெலா எண்ணெய்-வாங்கினால் 25% வரி


வெனிசுவெலாவிடம் இருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், தமது ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், வெனிசுவெலா நாடு அமெரிக்காவுக்கு எதிரியாக செயல்பட்டு வருகிறது. அதனால் வெனிசுவெலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரிவிதிப்பு முறை ஏப்ரல் 02ஆம் திகதியில் இருந்து அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் புதிய உத்தரவு காரணமாக சீனா, ஸ்பெயின், இந்தியா, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் வெனிசுவெலா ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த எண்ணெயில் சீனா 68 சதவீதம் அளவுக்கு  வாங்கியுள்ளதாக, அமெரிக்க எரிசக்தித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 (அல் ஜசீரா)

ஒத்தவை: