நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

தியாகி திலீபன் சிலை பறிப்பு-ENB கண்டன அறிக்கை


தியாகி திலீபன் சிலை பறிப்பு

ENB அறிக்கை

ஈழம்-யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலை, இலங்கை போலீசாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ளது. திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு நாளின் இறுதி நாள் நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 27, 2026 அன்று அதிகாலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு 11 நாட்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, 12ம் நாள் தனது பொலிஸ் படையை ஏவி இந்தப் பேடித்தனமான செயலைச் செய்துள்ளது, ஜே,வி,பி சமூக தேசிய வெறியரின் அனுர அரசு,

செப்டம்பர் 27 அதிகாலை வேளையில், சுமார் 15 முதல் 20 வரையிலான போலீசார் நல்லூர் நினைவிடத்திற்கு வந்து, சிலையின் பீடத்தை உடைத்து திலீபனின் சிலையை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தத் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் (CCTV) பதிவாகியுள்ளன.

திலீபனின் நினைவு இல்லத்தில் கடந்த 39 வருடங்களாக மக்கள் அஞ்சலி செலுத்தி  நினைவு கூர்ந்து வருகின்றனர்.முன்னைய சிலைகள் தகர்க்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15 அன்று பொதுமக்களாலும்,சிவில் அமைப்புகளாலும்,அரசியல் கட்சிகளாலும் இந்தச் சிலை அங்கு நிறுவப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கும் நிலையில், இச்சிலை "சட்டவிரோதமானது" எனக் கூறி நீதிமன்ற அனுமதியுடன் தாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அத்தகைய எந்த ஆவணங்களையோ, சட்ட விளக்கங்களையோ பொலிசார் தமக்கு வழங்கவில்லையென தனது கண்டன உரையில் வேலன் சுவாமிகள் கூறியுள்ளார்,மேலும் இதன் சட்ட நியாயம் குறித்து சட்டத்துறையினரும் கேள்வி எழுப்பியுள்ளனர், ஏனெனில் மாவீரர் தினத்தில் அரசு அழுது புலம்புவதற்கு உரிமை வழங்கியிருந்தது, 

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.  சிலை அகற்றப்பட்ட இடத்திற்கு மக்கள் தொடர்ந்து வருகை தந்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1987 செப்டம்பரில் இந்திய அரசுக்கு எதிராக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் நல்லூரில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். அதற்குப் பிறகு அங்கு அமைக்கப்பட்ட நினைவுத் தூபி மற்றும் சிலைகள், கடந்த 1996, 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்டதும், தற்போது மீண்டும் அங்கு வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் நாடளாவிய வகையில் மக்கள் கொதித்து கொந்தளித்துள்ளனர்,

இவ்வேளையில் சிலை தொடர்பாக ஓட்டுப் பொறுக்கி நாடாளமன்றக் கட்சிகளிடையே நாய்ச் சண்டை ஆரம்பமாகிவிட்டது, இவர்கள்தான் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விட்டுள்ளனர்,

திலீபன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தவும், இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்தும் போராடி உயிர் நீத்தார்.இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்படப்போகும் தீங்கை முதல் முதலாக- ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக சுதுமலைப் பிரகடனத்தில் சுட்டிக்காட்டியவர் திரு,பிரபாகரன் மட்டுமே.இலங்கை நாடாளமன்றத்தில் கூட இந்த ஒப்பந்தம் விவாதிக்கப்படவில்லை.அதன் ஒரு பிரகிதிகளுக்கும் அதில் என்ன இருக்கின்றது என்று தெரியாது.இன்றும் பலருக்கு தெரியாதிருக்க வாய்ப்புண்டு.இதே போல் தான் அனுரா ஆட்சி இந்தியாவுடன் செய்து கொண்ட இரு இராணுவ ஒப்பந்தங்களும் விவாதிக்கப்படவில்லை, பகிரங்கப்படுத்தப்படவும் இல்லை.

இலங்கை இராணூவத்துக்கு இந்தியா குருவி சுடப் பழக்கப் போகிறதோ என்னவோ அத்தகைய இரணுவ உபகரணங்களை விற்கவும், பயன்படுத்த பயிற்சி அளிக்கவும் இவ் ஒப்பந்தங்கள் வழி வகை செய்கின்றன!

1987 இல் ஜே.வி.பி கும்பல் இந்திய இராணுவம் தமிழருக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்க வந்துள்ளது என்றுகூறி போராடியது.இந்தியப் படை வருகையால் பிரேமதாச ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்று கனவு கண்டது.மாத்தையா-பிரேமதாசா பேச்சுவார்த்தையில் இந்தியப் படையை வெளியேற்ற உடன்பாடு காணப்பட்டதால் அந்தக் கனவு பலிக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான அப்பாவி சிங்கள ஏழை விவசாயக் குடும்பங்களின் குழந்தைகளை பிரேமதாச அரசு நரபலி எடுத்தது.களனி ஆற்றில், ரயர்கள் கட்டி எரிக்கப்பட்ட சடலங்கள் தோணிகளாய் ஊர்வலம் போயின.

இதற்கு காரணமான ஜே.வி.பி அரக்களைய மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.1987 இந்திய எதிர்ப்புப் போராளிகளுக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டவில்லை.ஆனால் இந்தியப் படையின் மண்டபதை மக்கள் வரிப்பணத்தில் பராமரித்துவருகின்றது,

இப்போ ஈழத்தில் இந்திய விரிவாதிக்க எதிர்ப்புப் போராளி தியாகி திலீபனுக்கு மக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் நான்காவது தடவையாக கட்டியமைத்த சிலையை பெயர்த்து பறித்தெடுத்துச் சென்றுள்ளது.

மொத்தம் எத்தனை காலனியாதிக்கப் பயங்கரவாதிகளுக்கு இலங்கையின் பட்டி தொட்டி எங்கும் சிலைகள் உண்டு, இது வெட்கம் இல்லையா!

மாவீரர் தினத்தில் கதறி அழ அனுமதித்த சட்டம் இப்போது ஏன் தடை செய்கின்றது?

`` இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை மண்ணில் இடமில்லை `` என்பதாலா?

அப்போதும் கூட நாம் தான் கலாச்சார இரட்டையர்கள் ஆயிற்றே, உருவ வழிபாடு உங்களுக்கும் உரியது தானே!

பாபர் மசூதியை இடித்துவிட்டு நீங்கள் இராமர் கோவில் கட்டவில்லையா? எங்கள் தெய்வங்களின் சிலைகளை மட்டும் ஏன் தகர்க்கின்றீர்கள்?

`கண தெய்யோ நாண்ட கீயா` என்று லேபில் அணிந்து கணபதிக் கடவுளை கடலிலே வீசினீர்கள்; தமிழாராய்ச்சி மாநாட்டு சிலையை மொத்தம் எத்தனை தடவை தகர்த்தீர்கள், மாவீரன் மில்லரின் உருவச் சிலை, மாவீரர் துயிலுமில்லங்கள், சற்றுப் பின்னே போனால் (!981) ஒளவையார், கண்ணகி, கூடவே மோகன்லாலுக்கும் கை உடைத்தீர்கள்.

அது சரி இந்த `தலை`, சிலை, ஆடல், பாடல் இதற்கெல்லாம் உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம்.

ஒன்று வல்லரசு, மற்றது வல்லரசின் பொல் அரசு.

நாட்டரசனையும், கூடவே பாட்டரசனையும் தின்று விழுங்கிவிட்டீர்கள், இப்போ அவன் எழுதிய் ஒரு பாட்டால் சரிந்து விழுகின்ற அளவுக்கா உங்கள் சாம்ராஜ்ஜியம் இருக்கின்றது.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ நெருப்போடு மீண்டும் விளையாடுகின்றீர்கள்.

திலீபன் சிலையை திருப்பி நிறுவுங்கள்.

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.

27-09-2026 ஈழம்

ஒத்தவை: