நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

கள்ளத்தோணி - ENB அறிக்கை


அறிக்கை:

மலையக ஓட்டுப் பொறுக்கிகள், மலையக மக்களுக்கு `காணி நிலம்` வழங்கி அவர்களை `முதலாளிகள்` ஆக்கப் போவதாக நெடுங்காலமாக புலம்பி வந்தனர், அந்தப் பராசக்தி கடாட்சம் ஜே.வி.பி ஆட்சியில் ஆரம்பித்து நிலத் துண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு துண்டுக்காணியில் வீடுகட்ட முயன்ற ஒரு காணி உரிமையாளரோடு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நுவரெலியா லிவர் ஸ்லீப் தோட்ட உதவி முகாமையாளர், அவரை கள்ளத்தோணி -நிலத்துக்கு உரிமையற்ற வந்தேறு குடி- என விழித்து, சிங்களப் பெருந்தேசிய வெறியைக் கக்கியுள்ளார்.(ஓக்டோபர் 2026).

இது மலையக தோட்ட மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.அந்த முகாமையாளரை பணி இடை நிறுத்தம் செய்யவேண்டும், அவர் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும், அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டம் வலுத்து வருகின்றது.

`நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது` என மலையக எழுச்சிப் பேரவை அறைகூவியுள்ளது.

இலங்கையில் மலையக மக்கள் தேசிய சிறுபான்மைச் சமூகத்தவர்(National Minorities) ஆவர்.

அந்த நாட்டின் அரசுமுறை அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தை இன்றுவரை வழங்கவில்லை. சமூக அங்கீகாரமே இல்லாதபோது சமூக உரிமைகள் எப்படிக்கிடைக்கும்.

இலங்கையில் மலையக மக்கள் தேசிய சிறுபான்மைச் சமூகத்தவர்(National Minorities) என்கிற உரிமை, அரசியல் உரிமை மற்றும் தேசிய ஜனநாயக உரிமையாகும். இது மனித உரிமை அல்ல. 

மலையக மக்கள் தேசிய சிறுபான்மைச் சமூகத்தவர்(National Minorities) என்கிற அந்தஸ்தையும், அவர்களுக்கான தேசிய ஜனநாயக உரிமைகளையும் அரசியல் அமைப்பில் உறுதி செய்யாதவரை இந்தக் கள்ளத்தோணிப் பிரச்சனை இல்லாது ஒழியாது.

இலங்கையர்,நல்லிணக்கம் என்கிற வெற்று வார்த்தைகளைக் கொண்டு, எண்பது ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட சமூக-தேசிய பகைமையை போக்க முடியாது,

சமூக,தேசிய பகைமையின் மீது கட்டப்பட்ட அரசுமுறையை ஜனநாயகப்படுத்தமுடியாது.

எனவே மலையகமக்கள் கள்ளக்காணி உதவி முகாமையாளரைத் தண்டிக்கக் கோரிப் போராடும் அதேவேளையில், தமது தேசிய சிறுபான்மைச் சமூகத்தவர்(National Minorities) என்கிற அந்தஸ்தையும், அவர்களுக்கான தேசிய ஜனநாயக உரிமைகளையும் அரசியல் அமைப்பில் உறுதி செய்ய தொடர்ந்து போராடவும் வேண்டும்.

இல்லையெனில் இன்னும் பல தசாப்தங்களுக்கு இந்த அடிமைத்தனம் தொடரவே செய்யும்.

மலையகமக்களின் பிரச்சனை அரசியல் சுயநிர்ணயம் பற்றிய பிரச்சனையாகும், இதை மனித உரிமைப் பிரச்சனை என்பது வெகுளித்தனமானது.பிரச்சனையின் தார்ப்பரியத்தைத் தகர்ப்பதாகும்.

ஒத்தவை: