நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

மாவீரர் நாள் 2026-ENB முழக்கங்கள்!


இறந்தோரை நினைவுகூரும் உரிமைக்காக அல்ல 

சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!

மாவீரர் அனுஸ்டானம் 2026:

  • கார்த்திகைப் பூ, தீபமேற்றத் தடை!
  • மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் பதாகைகளை அகற்றிச் சென்ற பொலிஸார்
  • கார்த்திகைப் பூவால் மாவீரர்களை நினைவுகூரவும் பொலிஸார் தடை – சாணக்கியன் குற்றச்சாட்டு!
  • முல்லைத்தீவு நினைவேந்தல் நிகழ்வில் ஒருவர் அதிரடியாகக் கைது!
  • போர்க்காலப் பாடல்கள் இசைக்கத் தடை!

மேற்கண்டவை இலங்கை வணிக மற்றும் இணைய ஊடகங்களின் செய்தித் தலைப்புகளில் சில!

இத்தகைய அடக்குமுறைகளுக்கும், அடாவடித்தனங்கள் அச்சுறுத்தல்களுக்கும், பொலிஸ் அராஜகத்துக்கும் மத்தியில் தான் ஈழ மக்கள் இவ்வாண்டு மாவீரர் தினத்தை அனுரா ஆட்சியின் கீழ் அனுஸ்டித்துள்ளனர்.

வெள்ளம் போல் திரண்ட வெகுஜனங்கள் தம் மாவீரச் செல்வங்களை வாழ்த்தி வணங்கி விடை பெற்றுள்ளனர்.

இந்தப் பொலிஸ் அராஜகம் ஒரு துறை சார்ந்த நிகழ்வு அல்ல. பூ முதல் தலைவரை இவை தடை செய்யப்படுகின்றனவென்றால் அதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்றது.விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதற்கு அது ஆயுதம் ஏந்திப் போராடியதல்ல-பயங்கரவாதம் அல்ல காரணம். அவர்களைப் போலவே ``போராடி`` ஈழத்தைக் கைவிட்டவர்கள் எல்லோரும் ``ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியோராக ஆரத்தழுவி அணைத்துக்கொள்ளப்பட்டுவிட்டனர்.1987 இலேயே இது நடந்துவிட்டது!

அதற்குப் பிறகும் இவர்களிடம் ஆயுதம் இருந்தது.

ஆயுத வியாபாரி கே.பி, மண்டையன் குழு சுரேஸ், வெள்ளைவான் வாழைத்தோட்ட டக்ளஸ், 800 பொலிஸ் கொலையாளி கருணா...... இவர்கள் யாரும் 40 ஆண்டுகளாக விசாரிக்கப் படவில்லை, தண்டிக்கப்படவில்லை.நீதி நிலைநாட்டப்படவில்லை.

( களனி ஆற்றுக்கே கிடைக்காத நீதி, தெமில ஜனதா வுக்கு கிடைக்குமா என்ன?)

ஆக ஆயுதம் அல்ல தடைக்குக் காரணம், ஆறாவது திருத்தமே தடைக்குக் காரணம். அதனால்தான் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட பிறகும், 18 ஆண்டுகளாக தடை நீடிக்கின்றது. உண்மையில் இந்தத் தடை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆனதல்ல மாறாக இது தமிழீழ விடுதலைக்கு போடப்பட்ட தடையாகும்.கட்டாய இணைப்பை சட்டபூர்வமாக்க தொடரும் தடையாகும். அதாவது சுய நிர்ணய உரிமைக்கு போடப்பட்ட தடையாகும். இவ்வாறு பிரிந்து செல்லும் உரிமை மறுக்கப்படுவதுதான் பிரிவினைக் கோரிக்கைக்கான புறவய அவசியமாகும்.

இந்த நீதியான தர்க்கம் ஏன் இந்தியா உள்ளிட்ட வேறு சில ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இந்தத் தடையை நீடித்துவருகின்றன என்பதையும் விளக்கும்.

ஏகாதிபத்திய உலகமேலாதிக்க, இந்திய விரிவாதிக்க, சர்வதேச வணிக, கந்துவட்டி நிதி மூலதன நலன்களுக்கு சுதந்திர தேசியக் கோரிக்கை -``புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்``-அடிப்படையில் எதிரானதாகும்.பகைமையானது ஆகும். அவர்களுக்கு அடிமைப்பட்ட தொடர் காலனிய பிரதேசங்களே தேவை.

இதனால்த்தான் ஈழப்பிரிவினை இன்றும் அவசியமானதும்,சரியானதும்,நீதியானதும் ஆகும்.

இல்லையென்றால் அது ஈழமக்களிடையேயான பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படவேண்டும்.

சமூக தேசிய வெறியரும், பெளத்த பாதுகாவலருமான ஜே.வி கும்பல், தனது சித்தாந்தம் மார்க்சியம் என்று கூறிக்கொண்டு, நடைமுறையில் ஈழதேசிய சுய நிர்ணய உரிமையை மறுக்கும் சிங்களப் பெருந்தேசிய வெறியராக நடந்துகொள்கின்றது. இதனால் தான் அவர்களை சமூக தேசிய வெறியர் என வரையறை செய்கின்றோம்.

இந்நிலையில் நாம் போராடவேண்டியது `` இறைமையுள்ள தமிழீழத்தின்`` சுய நிர்ணய உரிமைக்காக இருக்கவேண்டுமே தவிர இறந்தோரை நினைவுகூரும் உரிமைக்காக அல்ல. அது பிரதானமானதல்ல மேலும் அது மறுக்க இயலாத அடிப்படை மனித உரிமையாகும்.

இதை ``வழங்குவதற்கு`` அவர்கள் எவ்வளவு பெருந்தன்மையும், பேரன்பும் மிக்கவர்களாக இருக்க வேண்டும்!

நன்றி நல்லிணக்கவாதிகளே, வாழ்க உங்கள் ஜனநாயகம்.

எங்களை விடுங்கள்

ஒத்தவை: