நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

ரஷ்ய அலுமினிய இறக்குமதிக்கு EU தடை


ரஷ்ய அலுமினிய இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை

February 20, 2025 தினகரன்

ரஷ்யாவின் அலுமினிய இறக்குமதிகளுக்கு தடை விதிக்க ஐரோப்பிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தகைய இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீதான போரின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி இத்தடை ஐரோப்பிய ஒன்றிய வௌியுறவு அமைச்சர்களால் திங்களன்று முறையாக அங்கீகரிக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கும் 16வது தடையாக இத்தடை அமைகிறது.

இத்தடையின் ஊடாக ரஷ்யாவின் இலாபகரமான அலுமினியத் துறை குறிவைக்கப்படுகிறது.

அத்தோடு ரஷ்யாவின் 73 பழைய எண்ணெய்க் கப்பல்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் உலகளாவிய சுவிப்ட் கொடுப்பனவு முறைமையில் இருந்து மேலும் 13 ரஷ்ய வங்கிகளை ஐரோப்பிய ஒன்றியம் துண்டிக்கவும், மேலும் எட்டு ரஷ்ய ஊடக நிறுவனங்கள் ஐரோப்பாவில் ஔிபரப்பு செய்வதைத் தடுக்கவும் புதிய தடைத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.டி

ஒத்தவை: