நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

மே 9, 1945 தோழர் ஸ்ராலின் நாமம் வாழ்க!


மே 9, 1945 தோழர் ஸ்ராலின் நாமம் வாழ்க!

சுந்தர சோழன் முக நூல் 09-05-2025

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நாள். அன்று தொடங்கி இன்று வரை மே மாதம் 9ம் தேதி என்பது ஒட்டுமொத்த மனிதகுலமும் நினைவு கூரத் தவறக் கூடாத ஒரு நாள்.

சோவியத் செஞ்சேனைக்கு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் கொண்டாட்டத்திற்கு உரிய திருநாள்.

உலக வரைபடத்தில் இருந்து கம்யூனிசத்தைத் துடைத்தெறிய வேண்டும் என்ற வேட்கையுடன் புறப்பட்ட ஜெர்மன் நாஜிக்களும், அவர்களது அமெரிக்க பிரிட்டிஷ் கூட்டாளிகளும், கம்யூனிசப் பெரும் பதாகையின் முன் மண்டியிட்டு தனது கேவலமான தோல்வியை ஒப்புக் கொண்ட நாள்.

அமெரிக்க பிரிட்டிஷ் முதலாளித்துவ பெருநிதிக் கூட்டத்தினால் நிதியளிக்கப்பட்டு, தூண்டி விடப் பட்டு, ராணுவ மற்றும் அரசியல் ராஜதந்திர உதவியளிக்கப்பட்டு, சோவியத் நாட்டின் மீது பாய்ந்த பாசிசப் பெரும்பேய் தான் தோற்று விட்டதை ஒப்புக் கொண்டு, செஞ்சேனையின் முன்னால் மண்டியிட்டு தனது இறுதித் தோல்வியை ஒப்புக் கொண்ட நாள்.

போல்ஷிவிக் கம்யூனிஸ்டுகளிடம் இருந்து உலகை விடுவிப்போம் என்று வாய்வீச்சு பேசிய இட்லர் ஏப்ரல் 30ம் தேதி அன்று தற்கொலை செய்து இறந்து விட, மாபெரும் சோவியத் செஞ்சேனை அவனது தத்துவத்தை அடக்கிய சவப்பெட்டியின் மீது இறுதி ஆணியைச் செலுத்திய தினம்.

சோவியத் செஞ்சேனை (மற்றும் அதனை வழிநடத்திய சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும் மிகக் குறிப்பாக தோழர் ஜோசப் ஸ்டாலின்) மட்டும் இல்லையென்றால் இந்த ஒட்டு மொத்த உலகமும் பாசிஸ்டு நாஜிக் கூட்டத்தின் பிடியில் சிக்கி இருக்கும்.

இந்த நாள் ஒட்டு மொத்த மனித சமூகமும் தனது இறுதித் தருணத்திலும் மறக்கக் கூடாத மாபெரும் திருநாள்.

சோவியத் செஞ்சேனைக்கும் அதனை வெற்றியை நோக்கி வழிநடத்திய மாபெரும் தலைவன் தோழர் ஜோசப் ஸ்டாலின் அவர்களுக்கும் ஒட்டுமொத்த மனித குலத்தின் சார்பாக நன்றி செலுத்துவோம்.

ஒத்தவை: