வீழ்வோம் என்று நினைத்தாயோ?
நினைவாக:
கறுப்பு ஜுலையில் கால்ப் பந்தாடினோம்,
திலீபன் தினத்தில் தியாகம் போற்றினோம்,
சமாதானம் தின்ற செல்வனைத் தவிர்த்தோம்,
இசைப் பிரியாவை மீண்டும் ........ வதைத்தோம்,
மாவீரர் தினத்தில் மரங்கள் நாட்டினோம்,
முள்ளிவாய்க்காலில் கஞ்சி குடித்தோம்,
வீழ்வோம் என்று நினைத்தாயோ?
ஆயுதங்கள் மெளனிக்க
``அரசியல் வழியில்`` போராடினோம்,
பொன்சேகாவுக்கும், அனுராதிசாவுக்கும்,
ஒன்பது தடவை ஒத்தளித்தோம்,
ஐ.நா முன்னால் தீக்குளித்தோம்,
அமெரிக்க, EU கொடி பிடித்தோம்,
அந்நியச் சுடலைக்கு அழைப்பு விட்டோம்,
ஐயா மோடிக்கு கடலை விற்றோம்,
தையிட்டி வளர பொய்யீட்டி எறிந்தோம்,
கைகட்டி வாய் பீற்றும் கலைகள் அறிந்தோம்,
செல்லூர் வழியின் திசையைக் கொன்றோம்,
உள்ளூராட்சி சபையை வென்றோம்.
வீழ்வோம் என்று நினைத்தாயோ!
சூரியன் 15-05-2025