நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

தோழர்கள் அப்பு பாலன் நினைவு நீடூழி வாழ்க!



தோழர்கள் அப்பு பாலன் நினைவு நீடூழி வாழ்க!


பாசிச இந்திராவின் 21 மாத கால (from 25 June 1975 to 21 March 1977),அவசரகால (எமெர்ஜென்சி) ஆட்சியில், நாட்டின் உண்மையான விடுதலைக்காகப் போராடிய நக்சல்பாரி தோழர்கள் நரபலி கொள்ளப்பட்டனர். மத்தியுடன் கைக்கோர்த்த  கருணாநிதி நிர்வாகம், தமிழ்நாட்டிலுள்ள தோழர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவியது. அப்போதுதான் தோழர் அப்பு வேட்டையாடப்படார். மக்களின் எதிர்புக்கு அஞ்சி எமர்ஜென்சியை விலக்கிக்கொண்ட பிறகு, மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காங்கிரஸ், மாநிலத் தரகு எம்.ஜி.ஆர். ஆட்சியோடு கூட்டு சேர்ந்து பாசிச அடக்குறைகளைக் கட்டவிழ்த்தது.`குளத்தை வற்ற வைத்து மீன்களைக் கொல்ல` திட்டமிட்டது. தருமபுரி பகுதியில் நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைத்த `மக்கள் யுத்தக் குழு`வின் பாலன் தோழரையும் படுகொலை செய்தது. அத்தகைய தியாகத் தோழரின் நினைவாகவும், அப்பு உள்ளிட்ட இதுவரையில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் உயிர்நீத்த அனைத்து வீரத் தியாகிகள் நினைவாகவும் செப்-12ஐ தியாகிகள் தினமாக கடைபிடித்து வருகிறோம்.

சற்று ஏறத்தாழ இதே காலத்தில் இந்திரா,கருணாநிதி,எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் ஈழப்போராட்டத்தின் ஆதரவாளர்கள் ஆகினர்!

ஈழக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் அளிக்க இந்திரா முடிவு செய்தார்.மாநிலத் தரகு நிர்வாகங்கள் அதை உறுதி செய்தன.திருத்தல்வாத இந்திய இடதுசாரிகள் இதற்கு முற்போக்கு வர்ணம் தீட்டி கொள்கைப் பிரச்சாரம் செய்தனர்.எம்.ஜி.ராமச்சந்திரனின் பண உதவிக்கு பிரபாகரன் அவர்கள் நன்றி செலுத்தினார்.போட்டிக்கு கருணாநிதி டெலோ,புளொட் குழுக்களை ஊக்குவித்தார்.தமிழக மக்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வளர்ந்து வந்த ஆதரவின் காரணமாக மத்திய மாநில ஆளும் வர்க்கங்களைச் சார்ந்து ஒரு இனமானக் கும்பலும், அது சார்ந்த ஒரு ஆதரவு வலையமைப்பும் உருவாகியது.பெருமளவுக்கு இதில் தங்கியிருந்து புலிகள் யுத்தம் செய்தனர். யுத்தம் முன்னேறி வளர்ந்து வந்தது.

இவ்வாறு போராட்டம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கணிப்பிட்ட இந்தியா, ஆயுதக் குழுக்களை இலங்கை அரசுடன் சமரசம் செய்து ஆயுதப் போராட்டத்தைக் கைவிட நிர்ப்பந்தித்தது.1985 திம்புவில் இந்தியா தனது உண்மை முகத்தைக் காட்டி ஈழத்தின் முதுகில் குத்தியது. சகோதரப் படுகொலைகளை தூண்டியது. இந்திய ஆக்கிரமிப்புப் படையை ஏவி புலிகளை நிராயுதபாணியாக்க முயன்றது.தோல்விகண்டு மூக்குடைபட்டு திரும்பியது.

ஆனாலும் பத்தே ஆண்டுகளில் (1987-1977), இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாதாகிவிட்டது!

இது விரிவாதிக்க ஒப்பந்தம், இலங்கை தனது இறையாண்மையை அடகுவைத்த ஒப்பந்தம்.

இது முதல் கடந்த 40 ஆண்டுகளில், மொத்தமாக 50 ஆண்டுகளில் இலங்கையை இந்தியா அறிவிக்கப்படாத ஒரு அண்டை மாநிலமாக்கிவிட்டது. 

அரசியல் பொருளாதாரத் துறைகளில் மட்டுமல்ல, இராணுவ பாதுகாப்புத் துறைகளிலும் அடிமைப்படுத்தி விட்டது.

ஈழ தேசத்தை அடிமைப் படுத்தி ஆட்சி செய்யும் சிங்களம் தான் அடிமைப்பட்டுக்கிடப்பது தர்க்க ரீதியில் தவிர்க்க இயலாதுதான்!

தனது மூன்று நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.

பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டதாகக் கூறப்படுகின்றது. 

ஆனால் சந்தர்ப்பவாத ஜே.வி.பி கும்பல் இதற்கு மக்களிடம் அனுமதி கோரவில்லை.மக்களுக்கு பகிரங்கப் படுத்தவில்லை.நாடாளமன்றத்தில் கூட விவாதிக்கவில்லை.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கு சேவகம் செய்யும் குவாட் கூட்டின் மூன்று அடியாள் நாடுகளில் இந்தியா முக்கிய நாடாகும்.

இலங்கையை இந்தியாவுக்கு அடிபணிய வைப்பதன் மூலம் குவாட் கூட்டின் இராணுவப் பணிகளில் இலங்கையை கட்டாயமாக இணைக்கின்றது இந்தியா. இதற்கு துணைபோயுள்ளது அனுரா ஆட்சி.

இதனை ``அண்டை நாடுகளோடு கொண்டு கொடுத்தல்`` என்று விளக்கமளிக்கின்றது இந்தியா.இந்தியாவும் இலங்கையும் கலாச்சார இரட்டையர்கள் என்று ராமாயணக் கதை அளக்கின்றது!

அண்மைக்காலமாக அகண்ட பாரதம் கொஞ்சம் சுருங்கி சுருண்டுவிட்டது.

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் உலகப் பாசிசத்தின் பயிற்சிக் களமாக உள்ளது.இது அடுத்தடுத்த அமெரிக்க ஆட்சிகளில் எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்த்துக் கணிக்க வேண்டும்.

எனினும் இச் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் உலக மறுபங்கீட்டில் இந்தியாவின் அமெரிக்க சார்பு நிலையில் எந்த மாறுதலும் இதுவரையில் ஏற்படவில்லை.

உலக மறுபங்கீட்டுச் சேவகத்தின் விளைவான உள்நாட்டு நெருக்கடியை சமாளிப்பதற்கும், அண்டை அயல் நாடுகளை தன் குடையின் கீழ் தயார் செய்வதற்கும் இந்தியா, விரிவாதிக்கத்தையே தனது பிரதான ஆயுதமாகக் கொண்டுள்ளது.

இந்தியப் பாசிசம் என்பதும் விரிவாதிக்கத்திலேயே கட்டப்படுள்ளது.

எனவே நக்சல்பாரி புரட்சிகர தோழர்கள் அப்பு பாலன் நினைவு தினத்தில்;

இந்திய விரிவாதிக்க உலக மறுபங்கீட்டுப் பாசிசம் ஒழிக,

உலகத் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட தேசங்கள் ஒன்றுபடுக

என உரத்து முழங்குவோம்!

புதிய ஈழப் புரட்சியாளர் 12-09-2026

ஒத்தவை: