நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

'தவறான தகவல் உலகில் ட்ரம்ப்'- ஜெலென்ஸ்கி


தவறான தகவல் உலகில் வாழ்கிறார் ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதி
February 20, 2025 தினகரன்

ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட தவறான தகவல் உலகில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுடன் நாம் போரைத் தொடங்கியதாக பொய்க்குற்றம் சுமத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

கியூவ் வில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜெலென்ஸ்கி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எங்களை எப்போதும் ஆதரிக்கும் அமெரிக்க மக்கள் மீது அதிக மரியாதையைக் கொண்டிருக்கும் தலைவர் என்ற வகையில் இதனை குறிப்பிடுகிறேன். துரதிஷ்டவசமாக ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட தவறான கருத்துக்கள் உள்ள இடத்தில் ட்ரம்ப் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் நேற்று முன்தினம் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உயர் மட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். அப்பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி, இப்பேச்சுவார்த்தையில் இருந்து தாம் ஒதுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் குறிப்பிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்ப், நாங்கள் அழைக்கவில்லை தான். நீங்கள் மூன்று வருடங்களாக அங்கு இருக்கிறீர்கள். அதை பேசி முடித்திருக்க வேண்டும். அதை நீங்கள் தொடங்கவே இல்லை. பேச்சை தொடங்கி இருந்தால் ஒப்பந்தம் செய்திருக்கலாம்’ என்று குறிப்பிட்டார்.

ஆனால் ரியாத் பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த உயர் மட்ட குழுக்களை நியமிக்கவும் இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.

சி.என்.என்.

ஒத்தவை: