நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

மாவோயிஸ்ட் தோழர் பசவராஜ் படுகொலை.


இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி ( மாவோயிஸ்ட்)  இன் பொதுச் செயலாளர் மூத்த தோழர் பசவராஜ் படுகொலை.


சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் உள்ள கரேகுட்டாலு மலையில் ஆபரேஷன் பிளாக்பாரஸ்ட் என்ற பெயரில் 21 நாட்கள் மிகப் பெரிய தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (21), சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் இந்தியப் படை மேற்கொண்ட அழித்தொழிப்பு ராணுவ நடவடிக்கையில், நடைபெற்ற 50 மணி நேரச் சண்டையில், நக்சல்பாரிகள் தரப்பில் 27 பேர்  கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில்  நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜ்சும் அடங்குவர் என உள்துறைஅமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

நக்சல்பாரிப் புரட்சியாளர்களுக்கு எதிரான  இந்தியாவின் படுகொலைத் தாண்டவத்தில், பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ஒரு தலைவர் கொல்லப்பட்டது இதுவே முதன் முறையெனக் கருதப்படுகின்றது. இது குறித்து அமித் ஷா, 2026 மார்ச் மாதத்துக்கு முன்பு இந்தியாவில் இருந்து மாவோவாதிகளை ஒழிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக  கூறி, அரச படைகளை வாழ்த்தியுமுள்ளார்.

மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ்(68) நக்சல் அமைப்பில் பொதுச் செயலாளராகவும், பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார். இவர் தெலங்கானா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வாரங்கலில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார். இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1கோடி பரிசு வழங்கப்படும் என என்ஐஏ மற்றும் பல மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில் இவர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜ், பிரகாஷ், கிருஷ்ணா, விஜய், பசவராஜ் , உமேஷ், ராஜு, கம்லு என 8 பெயர்களில் அழைக்கப்பட்டார். மாவோயிஸ்ட் தலைவராக இருந்த கணபதி என்பவர் வயது முதிர்வு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக மாவோயிஸ்ட் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதன்பின் பசவராஜ் பொறுப்பேற்றார்.

இந்திய ஆந்திர மாநிலம் சார்ந்த வனப்பகுதிகளில் இயற்கை வளங்களை அந்நியருக்கு தாரை வார்க்கவும், அதன் மூலம் அம் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அதல பாதாளத்துக்கு தள்ளும் இந்தியப் பாசிச அரசை எதிர்த்து நக்சல்பாரிகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இப் போராட்டத்தின் சத்தீஸ்கார் சண்டையில் மக்களுக்காக மரணித்த தோழர் நம்பலா கேசவ் ராவ் (பசவராஜு) அவர்களுக்கு புதிய ஈழப் புரட்சியாளர்கள் செவ்வஞ்சலி செலுத்துகின்றனர்.

News In English

Maoist Leader With Rs 1.5 Crore Bounty Killed In Chhattisgarh: Amit ShahThe encounter, which lasted for over 50 hours, took place along the Narayanpur-Bijapur border.

Reported by: Anurag Dwary, Edited by: Srishti Kapoor India News May 21, 2025 

Top CPI (Maoist) leader Nambala Keshavrao alias Basavaraju is among the 27 Maoists who have been killed in an encounter with security forces in Chhattisgarh's Narayanpur district, declared Home Minister Amit Shah.

The encounter, which lasted for over 50 hours, took place along the Narayanpur-Bijapur border.

"A landmark achievement in the battle to eliminate Naxalism. Today, in an operation in Narayanpur, Chhattisgarh, our security forces have neutralized 27 dreaded Maoists, including Nambala Keshav Rao, alias Basavaraju, the general secretary of CPI-Maoist, topmost leader, and the backbone of the Naxal movement. This is the first time in three decades of Bharat's battle against Naxalism that a general secretary-ranked leader has been neutralized by our forces. I applaud our brave security forces and agencies for this major breakthrough," Mr Shah posted on X.

____________________________

அமைதிப்  பேச்சுவார்த்தை,  அரசியல் தீர்வு என  அழைப்பு விடுத்தாலும்,

கொல்வது ஒன்றே குறி!

என்று மோடி அரசு சத்தீஸ்கர் ஜார்கண்ட் மலைவாழ் பழங்குடி மக்களை

 மாவோயிஸ்டுகள் என்று வேட்டையாடியது.

அவர்களின் ரத்தம் தோய்ந்த ராமாயணமும் மகாபாரதமும்

 யுத்த வெறியினாலேயே முடிக்கப்பட்டது.

இங்கும் பயங்கரவாத புனைகதை,

மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர்

தோழர் பசவராஜ் அவர்களைக் கொன்று எழுதப்பட்டது.

எந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்தாரோ!

அந்த மண்  ஒரு தாயைப் போல  அவரது இறுதி மூச்சை தாங்கிக்கொண்டது!


மக்களோடு வாழ்ந்து மக்களோடு கலந்து அந்த மக்களுக்காகவே எந்தத் தனிச்சிறப்பும் தேடாமல்

அவர்கள் மத்தியிலேயே தியாகியான ஒரு கட்சியின்  பொதுச் செயலரை உலகம் காண்கிறது!

என்ன தவறு செய்தார்? ஏன் கொல்லப்பட்டார்? எம்.பி எம்.எல்.ஏ ஆகி  நாட்டை கொள்ளை அடித்தாரா?

காவித்துண்டை போட்டுக்கொண்டு பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் போல,

மக்களைக் கொல்ல மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டாரா?

காவி சூலத்தை ஏந்திக்கொண்டு குஜராத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்தாரா?

உலகறிய கடப்பாறைகளை திரட்டிக்கொண்டு பாபர் மசூதியை போய் இடித்தாரா?

சாராயம் விற்று ஊர் தாலியை அறுக்கவில்லை. பைனான்ஸ் நடத்தி பகல் கொள்ளை அடிக்கவில்லை.

ரியல் எஸ்டேட் போட்டு ஊரை வளைக்கவில்லை!

இப்படி எல்லாம் அரசியல் செய்யாததுதான் அரசுக்கு இவர் செய்த குற்றம்!

இந்தப் பயங்கரங்களை தீவிரமாக செய்ய மறுத்ததால்  இவரை தீவிரவாதி என்கிறது அரசு.

இவர் செய்த குற்றம் என்ன?

மத்திய இந்தியாவின் மலைகள் காடுகள்  இயற்கை வளங்களை கனிம வளங்களை,கார்ப்பரேட்டுகள் தனது உடமையாக்கி

தனியார்மய கொள்ளை அடிக்க திட்டமிடுவதை தடுத்து, நாட்டுக்கான மக்களுக்கான  அரசியல் செய்ததுதான் அவர் செய்த ' குற்றம் '!

"மாவோயிஸ்டுகளை" கொன்று விடலாம் என்பது சட்ட விரோதமானது கண்டிக்கத்தக்கது.

நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டிய கொலை இது!

மக்கள் விரோதிகளுக்கு மரண பயமே வாழ்வாகிறது!

மக்களுக்காக வாழ்பவர்களுக்கு மரணம் கூட வாழ்வாகிறது!

வாழ்வதின் பொருள் அரசியல் நேர்மையில் நிறைவாகிறது.

உழைக்கும் மக்களே நீங்களே பாருங்கள் !

எழுபத்திரெண்டு வயதான அந்த முகத்தை,

கொல்லப்பட்ட பிறகும் கூட அந்த முகத்தில்  பீதியோ பயங்கரமோ

கெஞ்சிப் பிழைத்ததோ மக்களுக்கு துரோகம் இழைத்த  'சவக்களையோ' இல்லை!

அவரைக் கொன்றவர்களின் இதயத்தில் இவை  மொத்தமாக இருக்கிறது!

சவக்களை கார்ப்பரேட் ஆட்சியில் தொடர்கிறது!

தீவிரமாக இதை நீங்கள் எதிர்த்தால் நீங்களும் தீவிரவாதியே!

   - துரை. சண்முகம்

ஒத்தவை: