நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

மாவீரர் நாமம் வாழ்க! மண் காப்புப் போர் எழுக!!


மாவீரர் நினைவேந்தல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!


அதனை ஈழ விடுதலைப் புரட்சித் திட்டத்தில் நிறுத்துவோம்!!

மாவீரர் தினம் 2025.

கார்த்திகை மாதம் 27ம் திகதி தமிழீழத் தேசிய மாவீரர் தினம்,

மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!

ஈழ மாவீரர் தினம், இலங்கைத் தீவில் ஒடுக்கப்படும் ஈழதேசம்,பிரிந்து சென்று தமிழீழத் தனியரசமைக்க நடத்திய ஆயுதம் ஏந்திய விடுதலைப் புரட்சியில்  தம்மை அர்ப்பணித்து ஆகுதியாக்கிக் கொண்ட போராளிகளை நினைவு கூரும் தினமாகும். இதுவல்லாமல் அது வேறெதுவுமல்ல.

  • இவ்வாண்டு இதே மாதத்திற்தான் ஒடுக்கும் சிறீ லங்கா அரசின் அனுரா அரசாங்கம் தனது இரண்டாவது, 2026ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.இலங்கையின் உடனடி மற்றும் நீண்ட எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது இதுவே ஆகும்.
  • நோபல் ரம்பின் யுத்த காண்டம் பாலஸ்தீனம்,வெனுசுவேலா, தாய்வான் என பல்கிப் பெருகி வருகின்றது.
  • மேலும் முக்கியமாக கார்த்திகை 29, பாட்டாளிவர்க்க ஆசான்  தோழர் ஏ.எம்.கே அவர்களின் நினைவு தினமும் ஆகும்.

மாவீரர் நினைவேந்தல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!

அதனை ஈழ விடுதலைப் புரட்சித் திட்டத்தில் நிறுத்துவோம்!!

* இந்தக் கணம் வரையான இலங்கைச் செய்திகளின் அடிப்படையில் அனுரா-ரில்வின் ஆட்சி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் மீது தனது பாசிச அரச வன்முறையை கட்டவிழ்த்த வண்ணம் உள்ளது.

* ஈழமக்கள் தமது சுய உணர்வில் இதை எதிர்த்து மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்கக் களம் புகுந்துள்ளனர்.

* `தமிழ்த் தேசியம் பேசும்` தப்புலிகள், `` இறந்தவர்களை நினைவு கூரல்``, `` சட்டபூர்வமாக நினைவேந்துதல்``, `` மாவீரர் கனவு அதிகாரப் பகிர்வு`` என பிதற்றி பித்தலாட்டம் செய்து வருகின்றனர்.

இம் மும்முனை முரண்பாட்டிற்கு தீர்வு கண்டு, மாவீரர்களின் தமிழீழக் கனவை அடையும் வண்ணம் ஈழப் புரட்சியைத் தொடர்வதே, மாவீரர் நினைவேந்தலின் பேரால் நாமும் நமது தலைமுறையும் செய்ய வேண்டிய பணியாகும்.

நிதி நிலை அறிக்கையும் நிதி மூலதன அடிமைத்தனமும்:

2026ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை அதன் சாராம்சத்தில் IMF முதலீடு செய்த நிதிமூலதனக் கடன்களுக்கும், அதன் விளைவான வங்குரோத்து மீட்புக் கடனுக்கும் வட்டி கட்ட உள் நாட்டு மக்களிடம் வரி அறவிடுவதையே அடிப்படை இலக்காகக் கொண்டது.

இது உண்மையில் என்னவென்றால் அந்நிய நிதி மூலதனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தேசிய மூலதனத்தை தாரை வார்ப்பதாகும். இந்த தேசிய மூலதனத்தை அந்நியருக்கு தாரை வார்ப்பது பொருளாதாரத் திட்டமாக உள்ளவரையில், உள் நாட்டுக்குள் மூலதனம் திரளாது. மூலதனம் இல்லாமல் (முதலாளித்துவ) பொருளாதாரம் வளராது.நாடு அபிவிருத்தி அடையாது.

இலங்கை போன்ற ஒரு விவசாய நாட்டில் `அபிவிருத்தி` என்பது விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதே ஆகும்.

1948 அதிகாரக் கைமாற்றம் முதல், இந்த நாட்டின் நாடாளமன்ற ஆட்சியாளர்கள் இதை அறவே கைவிட்டு விட்டனர்.நமது மன்னர்கள் கட்டி விட்ட குளங்கள், மற்றும் நம் முன்னோர் காலாதி காலமாக உருவாக்கி நிலைநிறுத்திய உலகத் தரமிக்க நீர்ப்பாசனக் கட்டமைப்பு எல்லாம் சிதைய விடப்பட்டுவிட்டது.பெருவீதத் தொழிற் துறை வளர்ச்சிக்கு ஏற்ப அவை நவீன மயப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் பெருவீதத் தொழிற் துறை வளர்ச்சி உலக வங்கியால் தடை செய்யப்பட்டிருந்தது, இன்னும் இருக்கின்றது.

இவ்வாறு விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு எதிரான ஒரு ஆளும் கும்பலும், அரசு முறையும் ஊட்டி வளர்க்கப்பட்டு, ஆயுதபாணியாக்கப்பட்டு `நாடாளமன்ற தரகு ஜனநாயகம்` மூலம் இந்த மூதேவி மக்களின் தலை மேல் உட்கார்ந்து இருக்கின்றது.

இவர்களால் ஆளப்படுகின்ற மக்கள், விவசாயிகள். அவர்களுடைய உயிர்வாழ்வுக்கான உற்பத்தி, உழைப்புச் சக்தி விற்பனை நிகழ்வது இந்த விவசாயப் பிரதேசத்தில், இந்த நிலையான விவசாயப் பிரதேசம் தான் தேசம்-A Nation. இது பொது மொழியாலும் பண்பாட்டு அம்சங்களாலும் பிணைக்கப்பட்டதாக அமைகின்றது. 

தேசத்துக்கான இதர எல்லா விளக்கங்களும் வியாக்கியானங்களும் முதலாளித்துவத் தேசியவாதத்தின் பொய் புரளிகள் தவிர வேறெதுவுமில்லை.இந்த இனம்,சிங்களவன் -தமிழன், ஆண்டபரம்பரை-குமரிக் கண்டம், துட்டகெமுனு-கரிகாலன், குபேனி வந்தது-சீதை போனது...இத்தியாதி இத்தியாதி எல்லாம், நிகழ்காலப் பேயாட்டத்தின் வர்க்க வேரை மூடிமறைக்க கடந்தகாலத்தில் இருந்து கடன்வாங்கிய பேய்கள்.இந்த இதிகாசங்களாலும் மதி மோசங்களாலும் உற்பத்திமுறையில் இருந்து எழும் விவசாயப் பிரச்சனையை மூடி மறைக்க இயலாது.மூர்க்கப் பிடிவாதமுள்ள வரலாறு அதை ஒருபோதும் அனுமதிக்காது.

தேசியப் பிரச்சனை எவ்வாறு எழுகின்றது:

தேசியப் பிரச்சனை எழுவதற்கான மூல காரணம் ஜனநாயகமற்ற அரசுமுறை நிலவுவதே ஆகும். காலனித்துவ காலத்தில் இலங்கையில் இருந்தது ஜனநாயக அரசுமுறை அல்ல. 1948 இற்குப் பிந்திய தொடர் காலனிய நாடாளமன்ற முறைமையில் தொடர்ந்து வளர்ந்ததும் ஜனநாயக அரசுமுறை அல்ல.முன்னையது காலனித்துவ நலனுக்காக முழு நாட்டையும் ஒன்றிணைத்து ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசுமுறை. பிந்தையது தொடர் காலனிய ஒடுக்குமுறைக்காக விவசாயப் பிரதேசங்களை மோதவிடுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசுமுறை. இவ்வாறு தான் தேசியப் பகைமையின் மீது கட்டப்பட்ட ஒரு பாசிச அரசு முறை இலங்கையில் உருவாகியது. இது தான் இலங்கையில் தேசியப் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணம்.

எனவே தர்க்க ரீதியாக இலங்கையில் தேசியப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமானால் இலங்கையின் அரசுமுறை ஜனநாயக அரசுமுறையாக மாற்றப்படல் வேண்டும்.

அனுரா ஆட்சி நிதி மூலதனத்துக்கு சேவகம் செய்கின்றது. தேசியப் பகைமையின் மீது கட்டப்பட்ட பாசிச அரசுமுறையைப் பாதுகாக்கின்றது. சோலைக் கிளியை வாரி அணைப்போம் ஆனால் சேலை இருக்கக் கூடாது, வாராது வந்துதித்தோம் ஆனால் ஆறாவது இருக்கும் என்கிறது! சுத்தம் செய்வதாகக் கூறி பாசிசத்தை பரிசுத்தம் செய்கின்றது.பாதாள உலகம் வரைக்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நாடுகளில் மைய அரசு நிலையான ஸ்திரமான ஆட்சியை நடத்துவது கடினம் என்பதை உலகின் வேறு பகுதிகளில் நாம் கண்டிருக்கின்றோம்.இதைக் கட்டுப்படுத்துவதில் மக்களுக்கு பலன் கிட்டுகின்ற அளவுக்கு அரசுக்கும் தேவை உண்டு. அந்தத் தேவை அனுரா அரசுக்கு மிக அதிகமாக உண்டு ஏனெனில்  சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நாட்டில் வரி வசூலிக்க முடியாது!

ஈழ தேசியப் புரட்சியின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? சமரச சக்திகள் யார்?

ஈழ தேசியப் புரட்சியின் பிரதான இலக்கு இலங்கை அரசுமுறையை ஜனநாயகமயப்படுத்துவதாக இருப்பதால் தொடர் காலனியத்தின் ஆதரவு சக்திகள் எதுவும் ஈழப்புரட்சியின் நண்பர்களாக இருக்கமாட்டா. ஏகாதிபத்திய நாடுகளும், ஐ.நா போன்ற அதன் அடியாட்படைகளும், இந்திய விரிவாதிக்க அரசும் நமது எதிரிகள் ஆவர். உலகெங்குமுள்ள சோசலிச, ஜனநாயக, தேசிய சுதந்திர சக்திகள் நமது நண்பர்கள் ஆவர். சிங்கள தேசத்தின் முற்போக்கு ஜனநாயக உழைக்கும் பாட்டாளி மக்கள் நமது நண்பர்கள் ஆவர்.`தமிழ்த் தேசியம்`, `சிறுபான்மை இன மத தேசியம்`, மற்றும் தொப்புள் கொடி ஏவாளின் நச்சு மர அப்பிள்கள் அனைத்தும் தனிமைப்படுத்த வேண்டிய சமரச சக்திகள் ஆகும்.

மாவீரர் நினைவேந்தல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!

மாவீரர் நினைவேந்தல் ஒரு வருடாந்த சடங்காகி வருகின்றது. அதே அளவுக்கு அரசியல் அற்றதாக ஆக்கப்படுகின்றது. `இறந்தவரை நினைவு கூரல்` என்பது இது தான். இந்த இடைவெளியில் எதிர்ப்புரட்சியாளர்கள் நுழைய முடிகின்றது. இல்லையென்றால் ``மாவீரர் கனவு அதிகாரப் பகிர்வு`` `` அதை அனுரா நிறைவேற்றி வைக்க வேண்டும்`` என ஒரு புறம்போக்கால் பேசமுடியாது. இப்படிப்போனால், தமிழீழம் (பொங்கு தமிழ்-தாயகம் தேசியம் தன்னாட்சி-அக சுய நிர்ணய உரிமை) இடைக்கால அதிகார சபையாகி, முள்ளிவாய்க்கால் சமஸ்டி ஆகி, சமஸ்டி மாகாண சபை ஆகி, மாகாண சபை உள்ளூராட்சி சபையாகி, உள்ளூராட்சி தொல் பொருள் புத்தராட்சி ஆகிய கதையாகவே மாவீரர் நினைவும் போய் முடியும்.

எனவே ஒரு ஜனநாயகத் திட்டத்தில்,

`மாவீரர் நினைவேந்தல் மக்கள் இயக்கத்தை`க் கட்டியமைப்போம்! இல்லையேல் வாக்கு, வரி கொடா இயக்கம் அமைப்போம்!!

(தொடரும்)

ஒத்தவை: