18.10.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணி
நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் மழை எதிர்வரும் 23.10.2026 வரை தொடரும் சாத்தியம்
எதிர்வரும் 20.10.2026 அன்று முல்லைத்தீவுக்கு வட கிழக்கு திசையில் வடக்கு மாகாணத்தை அண்மித்து தற்காலிக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் மழை எதிர்வரும் 23.10.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.
அதேவேளை எதிர்வரும் 23.10.2026 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 26.10.2026 அன்று ஒரு புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புயலாக மாற்றம் பெற்று எதிர்வரும் 29.10.2026 அன்று இரவு இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ராம்பில்லி என்னும் இடத்திற்கருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ( இது இன்றைய நிலையின் கணிப்பு..இதில் சிலவேளை சில மாற்றங்கள் நிகழலாம்.).
இந்த புயலினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புக்கள் இல்லையென்றாலும் இலங்கையின் பல பகுதிகளுக்கும் இக்காலத்தில் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்த தாழமுக்கத்தினால் (புயலினால்) எதிர்வரும் 30.10.2026 வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, கொழும்பு, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய மேற்கு மாகாணங்கள் இக்காலப்பகுதியில் மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களுக்கு தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதனால் எதிர்வரும் 26.10.2026 முதல் 29.10.2026 வரை கிடைக்கும் கனமழை இம்மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளை ஏற்படுத்தலாம்.
எனவே மத்திய, சப்ரகமுவா, ஊவா மாகாண மக்கள் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
அதேவேளை இக்காலப்பகுதியில் (24.10.2026 - 30.10.2026) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இம்மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளின் ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை எதிர்வரும் 25.10.2026 முதல் 30.10.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். இது ஒரு புயல் என்பதனால் கடற்கொந்தளிப்பு மிக உயர்வாக இருக்கும் என்பதை மீனவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அதேவேளை எதிர்வரும் 23.10. 2026 அன்று அரபிக்கடலிலும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இது வலுப்பெறுவதற்கான நிலைமை தற்போது தோன்றவில்லை.
- நாகமுத்து பிரதீபராஜா
මේ හේතුවෙන්, 2026.10.23 වන දින දක්වා උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව රටේ බොහෝ ප්රදේශවල පුළුල් වැසි ඇති වීමට ඉඩ ඇත.
2026.10.18 ඉරිදා ප.ව. 2.45
2026.10.20 දින උතුරු පළාත අසල මුලතිව් හි ඊසාන දෙසින් තාවකාලික පහත් මට්ටමේ සංසරණයක් ඇති වීමට ඉඩ ඇත.
මේ හේතුවෙන්, 2026.10.23 වන දින දක්වා උතුරු සහ නැගෙනහිර පළාත් ඇතුළුව රටේ බොහෝ ප්රදේශවල පුළුල් වැසි ඇති වීමට ඉඩ ඇත.
මේ අතර, 2026.10.23 වන දින මධ්යම බෙංගාල බොක්කෙහි සුළි කුණාටු සංසරණයක් ඇති වීමට ඉඩ ඇත. 2026.10.26 වන දින එය සුළි කුණාටුවක් දක්වා තීව්ර වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. එය සුළි කුණාටුවක් බවට තීව්ර වී 2026.10.29 වන දින රාත්රියේ ඉන්දියාවේ ආන්ද්රා ප්රදේශ් හි අනකපල්ලේ දිස්ත්රික්කයේ රම්පිලි අසල ගොඩබිමට ඇතුළු වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. (අද වන විට අනාවැකිය මෙයයි... මෙහි යම් යම් වෙනස්කම් ඇති විය හැක...).
මෙම සුළි කුණාටුවෙන් ශ්රී ලංකාවට සෘජුවම බලපෑමක් සිදු නොවුනත්, මෙම කාලය තුළ ශ්රී ලංකාවේ බොහෝ ප්රදේශවලට තද සිට ඉතා තද වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත.
මෙම පීඩන අවපාතය (සුළි කුණාටුව) හේතුවෙන්, යාපනය, කිලිනොච්චිය, මුලතිව්, මන්නාරම, වව්නියාව, ත්රිකුණාමලය, මඩකලපුව, අම්පාර, මහනුවර, මාතලේ, නුවරඑළිය, රත්නපුර, බදුල්ල, කොළඹ, කෑගල්ල, කළුතර, ගම්පහ සහ ගාල්ල දිස්ත්රික්කවල බොහෝ ප්රදේශවලට 2026.10.30 වන දින දක්වා පුළුල් ලෙස තද වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත. විශේෂයෙන් උතුරු, නැගෙනහිර සහ මැද-බටහිර පළාත්වලට මෙම කාලය තුළ ඉතා තද වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත.
මධ්යම, සබරගමුව සහ ඌව පළාත්වලට දැනටමත් අඛණ්ඩ වර්ෂාපතනයක් ලැබෙන බැවින්, 2026.10.26 සිට 2026.10.29 දක්වා ඇතිවන අධික වර්ෂාපතනය මෙම පළාත්වල ගංවතුර සහ නායයෑම් ඇති කළ හැකිය.
එබැවින්, ඉහත සඳහන් කාලය තුළ මධ්යම, සබරගමුව සහ ඌව පළාත්වල ජනතාව ඉතා ප්රවේශම් විය යුතුය.
ඒ සමඟම, මෙම කාලය තුළ (2026.10.24 - 2026.10.30) උතුරු සහ නැගෙනහිර පළාත්වල බොහෝ ප්රදේශවලට තද වැසි ඇති වීමේ හැකියාවක් පවතින බව සැලකිය යුතු අතර, එම පළාත්වල පහත් බිම් ප්රදේශවල ස්ථාන කිහිපයක සුළු පරිමාණ ගංවතුර තත්ත්වයක් ඇතිවීමේ හැකියාවක් ද තිබීම සැලකිය යුතු කරුණකි.
ඒ සමඟම, 2026.10.25 සිට 2026.10.30 දක්වා උතුරු සහ නැගෙනහිර පළාත්වල මුහුදු ප්රදේශ කැළඹිලි සහිත තත්ත්වයක පවතින බැවින් ධීවරයින් මුහුදු යාමෙන් වැළකී සිටිය යුතුය. මෙය කුණාටුවක් බැවින්, මුහුදු කැළඹිලි ඉතා ඉහළ මට්ටමක පවතින බව ධීවරයින් මතක තබා ගත යුතුය.
ඒ සමඟම, 2026.10.23 වන දින අරාබි මුහුදේ සුළි කුණාටු සංසරණයක් ද ඇති වීමට ඉඩ ඇත. කෙසේ වෙතත්, මෙය ශක්තිමත් වීමට කොන්දේසි තවමත් මතු වී නොමැත.
- නාගමුතු ප්රදීපරාජා -
