அன்னை வேலுசாமி மாரி அவர்கள், மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வடக்கு வவுனியாவில் குடியேறிய ஆயிரக்கணக்கான மலையக மக்களில் ஒருவர்.வவுனியா தோணிக்கல் பகுதியில் வாழ்ந்து வசித்தவர்.
இக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டடையும் ஈழத்தாய்மார்களின் போராட்டத்தில் இணைந்து ஊக்கமுடன் உழைத்து வந்தார்.
இப்போராட்டத்தின் 3000 ஆம் நாளான நேற்றைய தினம் தாயார் களப்பலியானார்.
இப்போராட்டத்தில் பங்கு கொண்டு போராடி வரும் காலத்திலேயே, புத்திர சோகத்தில் புலம்பி அழுது, மாரடித்து மாண்டு போன தாய் மாரின் வரிசையில் மலையகத்தாய் வேலுசாமி மாரியும் இணைந்து கொண்டார்.
இத் தீவட்டித் தாயை கண்ணீர் சிந்தி அஞ்சலிக்கும் மக்கள் கூட்டத்துடன் இணைந்து ENB உம் தன் துயர் பகிர்ந்து அஞ்சலிக்கின்றது.
