நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

இந்திய உதவியில் அனுராதபுர பெளத்த அபிவிருத்தி


அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் (அபிவிருத்தி ஒத்துழைப்பு, ஊடகம், தகவல் மற்றும் கலாசார அலுவல்கள்) ரோஷினி தொம்சன் (Roshini Thomson) ஆகியோரின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

முதன்மைச் செயலாளர் (அபிவிருத்தி ஒத்துழைப்பு, ஊடகம், தகவல் மற்றும் கலாசார அலுவல்கள்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியை தரிசிக்க வருகை தந்த வேளையில், புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்திருந்தார். அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய பெளதீக திட்டமிடல் திணைக்களம் இணைந்து அனுராதபுரம் புனித நகரத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய பெளதீக திட்டமிடல் திணைக்களம் இணைந்து தயாரித்துள்ள திட்ட வரைவு யோசனை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த யோசனை தொடர்பாக இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அண்மையில் அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக மகா சங்கத்தினர் மற்றும் அது தொடர்பான அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், குறித்த திட்டத்தை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

அனுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 7.7 பில்லியன் ரூபா செலவாகும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதிப் பங்களிப்பை இந்திய அரசாங்கம் வழங்கும் என்பதுடன், இத்திட்டத்தை இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் அனுராதபுரம் புனித நகரத்தின் புராதன மற்றும் சமய பின்னணியை பாதுகாத்து, நுழை வாயில்களை புனரமைக்கவும், கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்கும், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும், சிதைவடைந்துள்ள அனைத்து இடங்களையும் மீண்டும் புனரமைப்பதுடன் இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் (DC) ரம்யா சி. எஸ். (Ramya C. S.), தேசிய பெளதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.டி.எச். ருசிர வித்தான, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டி.எம்.டி.எஸ். திசாநாயக்க, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரிக்கா சேனநாயக்க உள்ளிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2026-10-01

ஒத்தவை: