ஜோதியின் பிரியாவிடை
12-10-2026
`சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளரும் பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், ஓய்வுநிலை ஆசிரியருமான`, - என்றெல்லாம் அறியப்பட்ட அன்புத் தோழன் சி.அ. யோதிலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை 09-10-2026 அன்று, தனது 70ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். அமரரான சி.அ.யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை அவரது பிறந்த ஊரான குப்பிளானில் நடந்தேறியது..
அவரது புகழுடலுக்கு உற்றார் உறவினர், பொதுமக்கள்,நண்பர்கள் தோழர்கள், நாடாளமன்ற அரசியல் கட்சி சார்பானவர்கள், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் சமூக செயற்பாட்டளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவரது இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவரது புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிச்சமயக் கிரியைகளில் பிரார்த்தனை செய்தார்.
கூடினோர் அழுகுரலின் மத்தியில் ஜோதியை அக்கினி பற்றிக்கொண்டது.
அன்புத் தோழன் ஜோதியின் சுமார் 55 ஆண்டுகால அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றது.
ஜோதிக்கு கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
அமரர் சி. அ. ஜோதிலிங்கம் அவர்களின் பிரிவு எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி உள்ளது. அன்னாரின் பிரவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழர் தேசத்தின் அரசியல் விடுதலைக்காக கடந்த 54 வருடங்களுக்கு மேலாக கொள்கை பிறளாமல் உழைத்து வந்த ஒரு நேர்மையான தீவிர செயற்பாட்டாளரும், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஆரம்பகால செயற்பாட்டாளரும், சமூக மாற்றத்தையும் தனது அரசியல் பயணத்தில் உறுதியாக வலியுறுத்தி வந்த கொள்கைத் திட்டம் கொண்டவரும், மலையக மக்கள் பற்றிய கொள்கை விவாதங்களை அரசியல் வெளியில் முன் மொழிந்து விவாதங்களை உருவாக்கியவருமாகிய, அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி, ஓய்வு பெற்ற ஆசிரியர் அமரர் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறோம்.
கிராமிய உழைப்பாளர் சங்கம்.
அன்னாரின் இறுதிக் காட்சிகள்.
![]() |
கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் அஞ்சலி |
இறுதி ஊர்வலம்
இறுதிக் கிரிகை
பொதுமக்கள்

செம்மணி நீதிபதி
.jpg)
அமைச்சர் சந்திரசேகரன்
.jpg)




