நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

மட்டக்களப்பில் கடற்றொழில் அமைச்சர்


கலங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை

March 27, 2025 பெரியபோரதீவு தினகரன் நிருபர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு இன்று (27) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது மட்டக்களப்பு கலங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

  • இறங்குதுறை அமைத்தல், 
  • களப்பு மற்றும் ஆற்றை ஆழப்படுத்தல், 
  • சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுத்தல் 
  • நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மீன்பிடி வசதிகளை மேம்படுத்தல், 
  • உயர் தரத்திலான வலைகளை அறிமுகம் செய்தல், 
  • கடலில் மீனவர்களை மீட்பதற்கான விசைப்படகின் தேவை

இதன்போது இறங்குதுறை அமைத்தல், களப்பு மற்றும் ஆற்றை ஆழப்படுத்தல், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுத்தல் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மீன்பிடி வசதிகளை மேம்படுத்தல், உயர் தரத்திலான வலைகளை அறிமுகம் செய்தல், கடலுக்கு செல்லும் மீனவர்கள் சுகவீனம் ஏற்படும் போது அவர்களை மீட்பதற்கான விசைப்படகின் தேவை கடற்றொழிலாளர்களினால் இங்கு வலியுறுத்தப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், சட்ட விரோத மீன்பிடியை தடுத்து கடலையும், கடல் வளத்தையும் பாதுகாப்பிற்கு தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குருஸ், மீனவ சங்க தலைவர்கள், கடற்றொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.🔺

ஒத்தவை: