ஈழ நிலப்பரப்பில் சட்டவிரோதமாக அத்துமீறி ஆக்கிரமித்து சிங்களம் ஒரு பாரிய விகாரையை அமைத்து பயன்பாட்டில் வைத்துள்ளது.இந்த விகாரை வழக்கம் போன்ற அரசமர விகாரைகளாக அல்லாமல் இலங்கையில் பெளத்தப் பரம்பலின் ஆதி வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று என்று ஆதாரம் கூறப்பட்டு, விகாரை முன்றலில் கற்பொறிப்பு செய்யப்பட்டும் உள்ளது.இந்த மாபெரும் கட்டிடம் கட்டியமைக்கப்பட்ட காலம் முழுவதிலும் `தமிழாண்மை` நல்லிணக்க மலடுதட்டி வாழாவிருந்தது.
இப்போது அது நிர்மாணிக்கப்பட்டு நிலை பெற்றுவிட்டது.அதிகாரத்தில் பிக்கு முன்னணி அமர்ந்துள்ளது.இனிமேல் அதில் காற்றுப் படுவதைக் கூட யாராலும் தடுக்கமுடியாது; அந்த மாவீரர்கள் எழுந்து வந்தால் ஒழிய....!
இதற்கு மத்தியில் அவ்விகாரையை ஒட்டி முத்துக் கலட்டி எனும் பகுதியில் தனியார் காணியொன்றில் புதிதாக ஒரு சட்ட விரோதக் கட்டிடம் கட்டப்பட்டுவருவதான முறைப்பாடு வலி வடக்கு பிரேதேச சபைக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து இந்தக் காணிப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு சபைத் தலைவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாளேந்திய சங்கிலியன் சிலை தங்க முலாம் பூசியது போல் ஜொலிக்கின்றது,பல்கலைக் கழகத்தில் பாட்டுக் கச்சேரி, ஊடகத்துறைக்குப் பயிற்சிப் பட்டறை, இந்திய அபிவிருத்தியில் அநுராதபுர பெளத்த நகரம்.எந்த நிலை வரும் போதிலும்.......
ENB
காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்!
GTN News July 22, 2025
ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
தையிட்டியில் உள்ள தனது காணியில் அடாத்தாக சட்டவிரோத கட்டடம் ஒன்றினை அமைத்து வருவதாக எமக்கு ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
எனவே முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ள காணியில் , தங்களுக்கு சட்ட ரீதியான உரித்து காணப்பட்டால் , அவற்றுக்கான ஆவணங்களை பிரதேச சபையில் சமர்ப்பிக்கவும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அக்காணியில் இருந்து வெளியேற வேண்டும். தவறின் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு தவிசாளர் சோ. சுகிர்தன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
யாழ் உதயன் 22-07-2025