IMF நிறைவேற்று சபை இம்மாதம் மீளக் கூடுகிறது
நிதியுதவி வழங்குவது குறித்து மீளாய்வு செய்யும்
February 19, 2025 தினகரன்
நாட்டின், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது மதிப்பீட்டை மதிப்பாய்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இம்மாதம் 28 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. ஊழியர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலின் பின்னர், இலங்கை சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
IMF நிறைவேற்று சபை இம்மாதம் மீளக் கூடுகிறது
