நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

United States Indo-Pacific Command கட்டளை அதிகாரி, - அநுர சந்திப்பு


ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கூட்டுப் படைத் தலைமையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ ஆகியோருக்கிடையில் சந்திப்பு இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு சம்பிரதாயபூர்வமாக வெளியிட்ட அதிகார பூர்வ அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேநேரம், இந்து சமுத்திர வலயத்தை பாதுகாத்து அமைதியான இந்து சமுத்திர வலயத்தை பேணுவதற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பையும் அட்மிரல் பபாரோ பாராட்டினார்.

இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்காவிற்கு இடையில் காணப்படும் வலுவான தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லவும், இலங்கை அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ளவும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாக அட்மிரல் ஜே.பபாரோ தெரிவித்தார்.

இலங்கையின் பாதுகாப்பு துறையின் மனித வள அபிவிருத்திக்கு ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்ப காலத்திலிருந்து இதுவரையில் வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது நன்றி தெரிவித்தார்.

வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) லெப்டினன் கேணல் அன்டனி நெல்சன், ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் சிரேஷ்ட வௌிநாட்டு கொள்கை ஆலோசகர் டேவிட் ரென்ஸ் (David Ranz) உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதே வேளையில் எலோன் மஸ்க் பென்ரகோன் அதிகாரிகளுடன் `அமெரிக்க சீன யுத்தம்` குறித்து நடத்திய உரையாடல், நியூ ஜோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது குறித்த சர்ச்சை அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

ஒத்தவை: