தமிழீழ விடுதலைப்புலிகள் ஒடுக்கும் சிங்கள தேசத்தின் ஆனையிறவு ஆக்கிரமிப்பு பெரும் படைத்தளத்தை அடித்துத் தரை மட்டமாக்கிய போது (2000 ஆம் ஆண்டு), இலங்கை அரசு பொறிந்து விழும் தறுவாயில் இருந்தது. தமது தொடர்காலனிய அரசு தகர்வதைத் தடுக்க அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய காலனியாதிக்கவாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிட்டனர்.
இதையொட்டி பிரபாகரன் பங்குபற்றிய சர்வதேச பத்திரிகையாளர் மாநாடு கிளிநொச்சியில் இடம் பெற்றது.
இதில் பிரபாகனை நோக்கி ஒரு இந்தியப் பத்திரிகையாளர் `` தங்களைக் கைது செய்யுமாறு இந்தியா (The International Criminal Police Organization) – INTERPOL ஐக் கோரியுள்ளது, தங்கள் கருத்தென்ன`` என வினவினார்.
அதற்கு பிரபாகரன் மொழிபெயர்ப்பாளரை நோக்கி `` நடக்கிற விசயத்தைப் பற்றி பேசச் சொல்லுங்கள்`` எனப் பதிலளித்தார் குறும்புப் புன்னகையோடு.