நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

‘வடக்குப் பிராந்திய காலநிலையியல்’ நூல் வெளியீடு


பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களுடைய ‘வடக்குப் பிராந்திய காலநிலையியல்’ நூல் கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பேராசிரியரின் Face book குறிப்பு வருமாறு:

24.04.2026 வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணி

எழுநாவின் வெளியீடாகிய, என்னுடைய ‘வடக்குப் பிராந்திய காலநிலையியல்’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்று கூடலில் 2026.04.22 (புதன்கிழமை) அன்று தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.

என்னுடைய வேலைப்பளு காரணமாக நான் கலந்து கொள்ளாத போதும் பலர் கலந்து கொண்டனர். 

சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. அனந்த பாலகிட்ணர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் புவியியல் பாட விரிவுரையாளராகிய திரு. க. அறிவழகன் அவர்களால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது.

மேற்படி உரையாடலின் பின்னர் பலர் என்னைத் தொடர்பு கொண்டு நூலின் சிறப்புக்கள் பற்றியும் எதிர்காலத்தில் மறு வெளியீடு செய்தால் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

நிகழ்வை ஏற்பாடு செய்த கொழும்புத் தமிழ்ச் சங்கம்.... நூலை வெளியிட்ட எழுநா....  தலைமையுரையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. அனந்த பாலகிட்ணர்..... நூலைப்பற்றியும் என்னைப் பற்றியும்  மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து இந்நூல் எழுதப்பட்ட நோக்கங்கள், நூல் பேசும் விடயப் பரப்புக்கள், அதன் சிறப்புகள், நூல் பற்றிய தனது கருத்துக்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தலுடன் கூடிய உரையாடலாக வெளிப்படுத்திய தேசிய கல்வி நிறுவகத்தின் புவியியல் பாட விரிவுரையாளராகிய திரு. க. அறிவழகன்.... நிகழ்வில் பங்கேற்று தனது கருத்துக்களைப் பதிவு செய்த என் நண்பன் கிருபா( யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்னோடு புவியியல் சிறப்புக்கலை கற்ற பல்துறை ஆளுமை மிக்கவன்... தற்போது கொழும்பு மாவட்டத்தின் மிகப்பிரபலமான வரலாறு பாட ஆசிரியர்) .... பங்கேற்று தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள்.... மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 

- நாகமுத்து பிரதீபராஜா -


Thambia Rajaratnam அறிவோர் ஒன்று கூடல் - 942

22 - 04 -2026 Face Book

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திரு. அனந்த பாலகிட்ணர் தலைமையில் நடந்த நிகழ்வில் திரு. க. அறிவழகன் ( விரிவுரையாளர்) உரை நிகழ்த்தினார்

 இன்று உலக புவி தினமாகும், இன்று அறிவுப் பகிர்விற்கு உட்பட்ட நூல் நாகமுத்து பிரதீபராஜாவின் " வடக்குப் பிராந்திய காலநிலையியல் " .

தலைவர் தனது உரையில்;

இன்று காலநிலை பற்றிய அறிவும், தேடலும் அது பற்றிய விழிப்புணர்வும் மக்களுக்கு அவசியமாகும்.யாழ் மக்களின் வாழ்வியலில் மரங்கள் பெறும் முக்கியத்துவம் யாழில் பழைய பூங்காவை அமைத்த கதை வட பிராந்தியத்தில் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து சபை அறியத் தந்தார்.பேச்சாளர் நூல் ஆசிரியரை அறிமுகம் செய்து இந் நூல் எழுதப்பட்ட நோக்கங்கள், நூல் பேசும் விடயப் பரப்பு , அதன் சிறப்புக்கள் ,நூல் பற்றிய தனது கருத்துக்கள் ஆகியவற்றை காட்சிப் படுத்தலுடன் கூடிய உரையாடலாக வெளிப்படுத்தினார்

நன்றி-ENB

ஒத்தவை: