நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிக வலுவான எல்நினோ


இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிக வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ளது. 

18.08.2026 செவ்வாய்க்கிழமை இரவு 11.45  மணி

Big Breaking 

கடந்த சில வாரங்களாக அதிகரித்து + 0.64 என்ற அளவில் இருந்த இந்து சமுத்திர இருமுனையின் அளவு(Indian Ocean Dipole - IOD) இவ்வாரம் மிகச் சடுதியாக +0.18 என்ற அளவில் குறைவடைந்துள்ளது. 

இது முற்றிலும் எதிர்பாராத ஆச்சரியமான ஒரு நிகழ்வு. இதன் அர்த்தம் யாதெனில் மிக வலுவான எல்நினோ இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதாகும். இந்து சமுத்திர இருமுனையினைச் சுருக்கும்/ அல்லது வலுக்குறைக்கும் அளவுக்கு எல்நினோ தொழிற்படுவது வானிலை ரீதியாக எமக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். 

ஏனெனில் இந்து சமுத்திர இருமுனையின் நேர் பெறுமானம் வலுவாக இருந்தாலே எமக்கு ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் போதுமான மழை கிடைக்கும். 

ஆனால் எல்நினோவின் காரணமாக இந்து சமுத்திர இருமுனை வலுக்குறைந்தால் எமக்கு கனமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மிகக் குறைந்த மழையே கிடைக்கும். 

இது தென்மேற்கு இலங்கையில் பருவக்காற்று காலத்தில் மழை கிடைக்காத அல்லது குறைந்த மழை கிடைத்த பகுதிகளில் மிகப்பெரிய நீர் நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. 

ஆகவே இந்த இந்து சமுத்திர இருமுனை பெறுமானப் போக்கை மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டியுள்ளது. செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை இதனை அவதானித்து அதன்பின்னரே ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிடைக்க விருக்கும் மழை பற்றி மிக உறுதியான தீர்மானத்துக்கு வர இயலும். 

எல்நினோ மிக உறுதியாகத் தொழிற்பட்டு இந்து சமுத்திர இருமுனை வலுவற்ற நேர்மறை அல்லது எதிர்மறை பெறுமானத்தைக் கொண்டிருந்தால் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிக மிக குறைவான அளவே மழை கிடைக்க வாய்ப்புள்ளது. 

ஆகவே இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எல்நினோவின் தன்மையும் இந்து சமுத்திர இருமுனையின் விருத்தியும் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலேயே ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிடைக்கவுள்ள மழை பற்றிய இறுதித் தீர்மானத்தை எட்ட முடியும். 

இது முன்னைய எதிர்வுகூறல்களுக்கு முற்றிலும் மாறானது. 

எவ்வாறாயினும் தற்போதைய இந்து சமுத்திர இருமுனையின் திடீர் வீழ்ச்சிப் போக்கு வானிலையைப் பொறுத்தவரை உசிதமானதல்ல. 

எவ்வாறாயினும் இந்து சமுத்திர இருமுனையின் பெறுமானம் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் எவ்வாறு இருக்கும் என்பதிலேயே இவ்வாண்டின் இரண்டாவது இடைப்பருவ மழையும் வடகீழ்ப் பருவக்காற்று மழையும் தங்கியுள்ளது. 

இந்த இரண்டு பருவ மழையுமே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாழ்வையும் வளத்தையும் தீர்மானிக்கும். எங்களின் அனைத்து நீர்ததேவைகளும் இந்த இரண்டு பருவ மழையினாலுமே பூர்த்திசெய்யப்படுகின்றது. 

எம்மைப் பொறுத்தவரை தற்போது இருக்கும் தரைக்கீழ் மற்றும் தரை மேற்பரப்பு நீர் வளமே நிச்சயமானது. 

ஆகவே அன்புக்குரிய உறவுகளே..... நீரை வீண்விரயம் செய்யாதீர்கள்....

எமக்கு இக்காலப்பகுதியிலேயே அதிக நீர்த்தேவைகள் இருக்கும்( கோவில்களின் பெருந்திருவிழாக்கள்...அதிக வெப்பமான வானிலை.... பாடசாலை விடுமுறைக்காலம்..) 

தயவு செய்து நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.

- நாகமுத்து பிரதீபராஜா - 

https://www.facebook.com/Piratheeparajah

ஒத்தவை: