நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

மோடியிடம் முறையிடும் இ.த.க


மாகாண சபை அதிகாரங்கள் பறிப்பு - மோடியிடம் முறையிடுவோம்

ஆதீரா Saturday, March 29, 2025  யாழ்ப்பாணம்

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது.

அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.

அதேவேளை எங்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு தேசிய ரீதியான தீர்வுக்கான முன்மொழிவை  பிரதமர் மோடி அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை மோடிக்கு தெரிவிப்போம் என்றார்.

வழக்கு வெல்லுவதற்கு சாத்தியம்?

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வினால் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாண தேர்தல் அத்தாட்சி அலுவலர்களால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட ஒன்பது வழக்குகளும், அதே காரணத்துக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட ஒரு வழக்கும், மன்னார் - மாந்தை பிரதேச சபைக்கான வேட்புமனு  நிராகரிக்கப்பட்ட வழக்கு உட்பட பதினொரு வழக்குகளோடு சேர்த்து வேறு காரணங்களுக்காகவும் நிராகரிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விசாரணையின் முடிவில் சட்டமா அதிபர் தலைமையில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணியை வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணிகளோடும் தேர்தல் ஆணையகத்தின் முடிவெடுக்கக் கூடியவர்களோடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30)  ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தி சுமுகமான முறையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விடயங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.

அந்த முடிவிற்கு பின்னராக வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 10 மணி அளவில் இந்த வழக்குகள் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இளையோரின் வயதை உறுதிப்படுத்த வேட்புமனுக்களோடு சமாதான நீதவானாலோ அல்லது வேறு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒருவராலோ அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகள்; சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

வேட்பு மனுக்கள், பிறப்புச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தோடு யாழ்ப்பாண தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் நிராகரிக்கப்பட்டிருந்தன.

சட்டத்தில் உள்ள படி அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி என்பது யாரால் அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படாத வரையில், வழக்கத்தில் உள்ளபடி அத்தாட்சிப்படுத்தப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்படலாம் .

இந்த வழக்கங்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொழுது ஏற்றுக்கொள்ளப்படமுடியாது எனில் சட்டத்துக்கான வியாக்கியானங்களை நிலை நிறுத்துவதற்கான வாதப் பிரதிவாதங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அதனால் தேர்தலுக்கான தடை உத்தரவை பெற்றுக்கொண்டு வழக்குகளை தொடர்ந்து நடாத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.☁

ஒத்தவை: