நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

தமிழீழத் தங்கம், இலங்கை மக்கள் வங்கியிடம்.


தமிழீழ வைப்பக தங்கம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

ENB 03-05-2025

விடுதலைப் போரில் இலங்கை அரசு கைப்பற்றிய தமிழீழ வைப்பக தங்கம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழீழ வைப்பகம், மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நீண்ட நாட்களாகக் கொண்டிருந்த எண்ணப்பாட்டுக்கமைய, 1994 மே மாதம் 23 நாள் ஆரம்பிக்கப்பட்டது. 

யுத்தம் ஈழப்படுகொலை மூலமும், ஆனந்தபுர விசவாயுத் தாக்குதலில் விடுதலைப் புரட்சியின் இராணுவத் தலைமை நயவஞ்சமாக அழித்தொழிக்கப்பட்டும் முடிவுக்கு வந்தபோது தமிழீழ வைப்பகத்தின் சொத்துக்களை இலங்கை ராணுவம் கைவசப்படுத்திக் கொண்டது.கடந்த 16 ஆண்டுகளில் இதை ஈழ மக்களிடம் கையளிக்க சிங்களம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இப்போது அவ் ஈழப் பொதுச் சொத்தை -பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி உட்பட-பதில் பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு இன்று (2-05) நடைபெற்றுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

இந்தநிலையில், பதில் பொலிஸ் மாஅதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வௌ்ளி என்பனவற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையூடாக மதிப்பிடப்பட்டதன் பின்னர் அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கை இராணுவம் போகிற போக்கில் தெரிவித்துள்ளது.

அனுரா- அக்கா ஆட்சி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடித்து அமூலாக்கிவருகின்றது.அதன் படி விடுதலைப் புலிகளுக்கு தங்கம் வழங்குவது `சிரச் சேதத்துக்குரிய` குற்றமாகும்.மக்கள் எப்படி அடையாளப் படுத்துவார்கள்?

இதனால் தனிப்பட்ட முறையில் இதனை மீளப்பெறுவது சாத்தியமானது அல்ல. இதைச் சிங்களம் உடமையாக்குவது போர்க்குற்றமாகும்.

எனவே ஈழப்பொதுச் சொத்தை மீளப் பெற ஈழமக்கள் கூட்டாகப் போராடவேண்டும்.

அதனால் மட்டுமே எமது தனி உடைமைகளை நாம் மீளப்பெறமுடியும்.

ENB செய்தியாளர் ரம்மியா


🔴 வரலாற்றுக் குறிப்பு:

தமிழீழ வைப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 1994 மே மாதம் 23

பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 23 May, 2021

தமிழர்களுக்கான ஒரு வங்கி அமைப்பைத் தொடங்க வேண்டுமென்ற, எங்களுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற, தமிழர்களுக்கென்ற – ஒரு சிறப்பான முறையிலே தமிழ் மக்களுடைய பொருண்மியத்தை மேம்படுத்தக் கூடியதாக – அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடக் கூடியதாக ஒரு வைப்பகத்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணப்பாட்டை எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நீண்ட நாட்களாகக் கொண்டிருந்தார்கள்.

 அதன் செயல் வடிவமே தமிழீழ வைப்பகத்தின் தோற்றம் ஆகும்.

 திரு. செ.வ.தமிழேந்தி, நிதிப்பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப்புலிகள்.

Source: thaarakam.net/news

ஒத்தவை: